3 வகையான இந்திய அணிக்கும் தனித்தனியே புதிய ஜெர்ஸியை வெளியிட்ட அடிடாஸ் நிறுவனம் – ரசிகர்கள் வரவேற்பு

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழ்ந்து வரும் இந்தியா ஐசிசி தர வரிசையில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் 3வது இடத்தில் இருக்கும் இந்தியா ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் அடங்கிய தரமான அணியாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வரும் இந்தியா பெரும்பாலான ஐசிசி தொடர்களிலும் தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்ல போராடி வருகிறது.

அதே போல ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ பல ஆயிரம் கோடிகளை வருமானமாக பெறுவதால் உலகின் இதர நாடுகளை காட்டிலும் மிகவும் பணக்கார வாரியமாக இருக்கிறது. அதனால் இந்திய அணிக்கு ஸ்பான்சர்ஷிப் செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் பிரபல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து போட்டி போடுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்போது இந்திய அணியினர் அணிந்து விளையாடும் ஜெர்சி ஸ்பான்சராக உலகப் புகழ் பெற்ற அடிடாஸ் நிறுவனம் சமீபத்தில் பெரிய தொகையை செலுத்தி பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

- Advertisement -

ரசிகர்கள் வரவேற்பு:
அதை தொடர்ந்து லண்டனில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையிலிருந்து இந்திய அணியினர் அணிந்து விளையாடும் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் கொடுக்க உள்ளது. பொதுவாகவே சாதாரண உடைகளில் பிரத்தியேக வேலைப்பாடுகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு மிகப்பெரிய பிராண்டாக பார்க்கப்படும் அடிடாஸ் நிறுவனம் இந்திய அணிக்கு எந்த வகையான ஜெர்சியை உருவாக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.

இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியினர் அணிந்த விளையாடும் பிரத்தியேக ஜெர்ஸியை இன்று அடிடாஸ் நிறுவனம் மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் அறிமுகப்படுத்தியது. அதற்காக இன்று காலையிலிருந்து கழுகு பார்வையில் பார்த்தால் பெரிதாக தெரியும் 3 பிரம்மாண்ட ஜெர்சியை அங்கு அடிடாஸ் நிறுவனம் பறக்க விட்டு புகைப்படங்களை எடுத்தது அந்த வழியாக ரயில் பயணத்தில் சென்ற ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

- Advertisement -

அந்த நிலையில் தற்போது இந்திய அணியினர் விளையாடும் 3 ஜெர்சியையும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் முதலாவதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிந்து விளையாடும் வெள்ளை நிற ஜெர்ஸியில் தோள்பட்டை பகுதிகளில் 3 நிற கோட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய டிசைன் முதல் பார்வையிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் சற்று லேசான வெளிர் ஊதா நிறத்துடன் பிரத்தியேக டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள ஜெர்சியின் தோள்பட்டை பகுதியில் 3 வெள்ளை நிற கோடுகள் இருப்பதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அத்துடன் டி20 ஜெர்ஸியில் அடர்த்தியான ஊதா நிறத்தில் முன் பகுதிகளில் லேசான வெளிர் ஊதா நிறத்தில் பிரத்தியேகமான டிசைன் இருப்பதுடன் தோள்பட்டை பகுதியில் அடிடாஸ் நிறுவனத்திற்கே உரிய 3 வெள்ளைக் கோடுகள் இருப்பது தனித்துவமாக தெரிகிறது. அந்த வகையில் இந்த 3 விதமான ஜெர்சியும் சிறப்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் ரசிகர்கள் விரைவில் இந்திய அணியினர் அணிந்து விளையாடுவதை பார்க்க அவருடன் காத்திருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க:IPL 2023 : 2023 ஆம் ஆண்டிற்கான பெஸ்ட் ஐ.பி.எல் பிளேயிங் லெவனை வெளியிட்ட கெவின் பீட்டர்சன் – லிஸ்ட் இதோ

அது போக ஏற்கனவே வலை பயிற்சிக்காக அடிடாஸ் நிறுவனம் வெளியிட்ட ஜெர்ஸியை தற்போது இந்திய அணியினர் லண்டனில் அணிந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அது ஏற்கனவே வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த 3 முதன்மை ஜெர்ஸிகளும் இந்திய அணியினர் அணிந்து விளையாடிய பின் ரசிகர்கள் வாங்குவதற்காக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement