IPL 2023 : 2023 ஆம் ஆண்டிற்கான பெஸ்ட் ஐ.பி.எல் பிளேயிங் லெவனை வெளியிட்ட கெவின் பீட்டர்சன் – லிஸ்ட் இதோ

Pietersen
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய பல வீரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

CSK vs GT

- Advertisement -

அதோடு நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களையும் வைத்து இந்த ஆண்டிற்கான சிறந்த பிளேயிங் லெவனனையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை வைத்து சிறந்த பிளேயிங் லெவனை வெளியிட்டு வரும் வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சனும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து பெஸ்ட் பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார்.

Siraj

அந்த வகையில் இந்த 2023-வது ஆண்டிற்கான துவக்க வீரர்களாக டூப்ளிசிஸ் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரையும் அவர் தேர்வு செய்துள்ளார். அதோடு மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹென்றிச் கிளாசன் ஆகிய மூவரையும் அவர் பேட்டிங் ஆர்டரில் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அதோடு ஆறாவது வீரராக பின்வரிசையில் ரிங்கு சிங்கை அவர் தேர்வு செய்துள்ளார். மேலும் ஆல்ரவுண்டராக அக்சர் பட்டேலையும், பந்துவீச்சாளர்களாக ரஷித் கான், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் மதீஷா பதிரானா ஆகியோரை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி கெவின் பீட்டர்சன் தேர்வு செய்த பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : WTC Final : ஃபைனலில் அந்த 2 அனுபவ இந்திய வீரர்களை ஈஸியா விட்றாதீங்க, ஆஸி அணியை எச்சரித்த ரிக்கி பாண்டிங்

1) டூபிளெஸ்ஸிஸ், 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹென்ரிச் கிளாசன், 6) ரிங்கு சிங், 7) அக்சர் பட்டேல், 8) ரஷீத் கான், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 11) மதீஷா பதிரானா.

Advertisement