WTC Final : ஃபைனலில் அந்த 2 அனுபவ இந்திய வீரர்களை ஈஸியா விட்றாதீங்க, ஆஸி அணியை எச்சரித்த ரிக்கி பாண்டிங்

Ponting
- Advertisement -

இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் 2023 உலக கோப்பையின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியன் தீர்மானிக்கப் போகும் இந்த போட்டியில் பட் கமின்ஸ் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலியாவை தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் நழுவ விட்ட கோப்பையை இம்முறை எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி இந்தியா வைக்க போராட உள்ளது.

- Advertisement -

இருப்பினும் அதற்கு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களாக இருக்கும் மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை விட பொதுவாகவே சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட பழகிய இந்திய அணியினர் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவை போலவே வேகத்துக்கு சாதகமாக இருக்கும் இங்கிலாந்து மைதானங்களில் தடுமாறுவது வழக்கமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் ஆகிய முரட்டுத்தனமாகவும் துல்லியமாகவும் வீசக்கூடிய 3 அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

ஈஸியா விட்றாதீங்க:
இருப்பினும் அதற்கு நிகரான தரத்தையும் அவர்களை இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக எதிர்கொண்டு 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் டெஸ்ட் தொடர்களை வென்று சரித்திரம் படைப்பதற்கு முக்கிய பங்காற்றிய புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த ஃபைனலில் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரை செட்டாக விடாமல் முன்கூட்டியே அவுட்டாக்கினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற எண்ணத்துடன் ஆஸ்திரேலியா செயல்பட வேண்டுமென முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

pujara 1

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய அணியினர் விராட் கோலியை பற்றி பேசுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல புஜாராவை பற்றியும் அவர்கள் அணி மீட்டிங்கில் பேசுவார்கள். அந்த இருவரும் முக்கியமான வீரர்கள். அதிலும் குறிப்பாக புஜாரா கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வலியை கொடுக்கும் முள்ளாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்கள் கிட்டதட்ட ஆஸ்திரேலியாவை போலவே இருக்கும். அதில் வெற்றி பெற புஜாராவை எளிதில் அவுட்டாக்க வேண்டும் என்பதை ஆஸ்திரேலியர்கள் அறிவார்கள்”

- Advertisement -

“அதே போல டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும் கடந்த 2 வாரங்களில் விராட் கோலி தன்னுடைய முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார் என்பதையும் ஆஸ்திரேலிய அணியினர் அறிவார்கள். குறிப்பாக தம்முடைய முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக விராட் கோலி கடந்த சில வாரங்களுக்கு முன் என்னிடம் தெரிவித்திருந்தார். அப்படி அவர் சொன்னது ஆஸ்திரேலியர்களுக்கு இந்த ஃபைனலில் மிகப்பெரிய எச்சரிக்கையாகும்” என்று கூறினார்.

அவர்களை போலவே சமீபத்தில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் மற்றும் முகமது ஷமி பற்றி பாண்டிங் மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் மிகவும் திறமையான இளம் வீரராக காட்சியளிக்கிறார். சற்று ஆக்ரோஷமாக செயல்படும் தன்மையும் கிளாஸ் நிறைந்த திறமையும் அவரிடம் இருக்கிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஃபுல் ஷாட்டை சிறப்பாக அடிக்கும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசத்தும் திறமையும் கொண்டுள்ளார்”

இதையும் படிங்க:WTC Final : பேட்டை காட்டுத்தனமா சுத்தாதீங்க, ஸ்மித்த அவுட்டாக்கும் ஐடியாவை அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க – கவாஸ்கர் அட்வைஸ்

“மேலும் இந்த போட்டியில் இந்தியா வெல்வதற்கு முகமது ஷமி மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே நல்ல திறமை கொண்ட அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களும் உணர வேண்டும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுக்கும் இந்திய பவுலர் என்றால் அது அவராகத்தான் இருப்பார்” என்று கூறினார்.

Advertisement