- Advertisement -
ஐ.பி.எல்

லீவ்ல நினைச்சதை சாதிச்சுட்டேன்.. சதமடிச்சு டெல்லியை வீழ்த்த இதான் காரணம்.. ஆட்டநாயகன் சுதர்சன் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 60வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் எளிதாக தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அதிகபட்சமாக கேஎல் ராகுல் 112* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அடுத்து விளையாடிய குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி சதத்தை அடித்து 108* (61) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 205/0 ரன்களை எடுத்து குஜராத்துக்கு முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இதையும் சேர்த்து 9வது வெற்றியை பெற்ற அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

குஜராத் வெற்றி:

அத்துடன் பெங்களூரு, பஞ்சாப் அணிகளும் தகுதி பெற்ற நிலையில் எஞ்சிய 1 இடத்திற்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டியிடுகின்றன. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஐபிஎல் நிறுத்தப்பட்ட போது கிடைத்த இடைவெளி நாட்களில் கடைசி வரை அவுட்டாகாமல் ஃபினிஷிங் வேண்டும் என்று நினைத்ததை இப்போட்டியில் செய்துள்ளதாக சுதர்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் மனதளவில் முன்னேற்றத்தைச் சந்தித்ததே தம்முடைய தொடர்ச்சியான நல்ல ஆட்டத்திற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அணியை வெற்றி பெற வைத்ததில் சிறப்பாக உணர்கிறேன். நீங்கள் போட்டியை ஃபினிஷிங் செய்யும் போது அதில் கொஞ்சம் மகிழ்ச்சி இருக்கும். இடைவெளியில் அதைப்பற்றி அதிகமாக சிந்தித்தேன்”

- Advertisement -

ஆட்டநாயகன் சுதர்சன்:

“அது வெகுமதியைக் கொடுத்துள்ளது. 6 ஓவர்கள் முடிந்ததும் டெல்லி அணியினர் நன்றாக பவுலிங் செய்தனர். அப்போது நாங்கள் போட்டியை ஆழமாக எடுத்து சென்று விளையாட விரும்பினோம். 12வது ஓவருக்குப்பின் 2 பெரிய ஓவர்கள் கிடைத்தது. போட்டியை நாங்கள் கடைசி வரை எடுத்துச் சென்று முடிக்கத் தேவையான பொறுமையைக் கொண்டுள்ளோம். இதற்கு முந்தைய போட்டிகளில் ரிஸ்க் எடுத்தும் அது வேலை செய்யவில்லை”

இதையும் படிங்க: 205 ரன்ஸ்.. கில் – சுதர்சன் சரித்திர சாதனை.. டெல்லியை சாய்த்து 2 அணிகளை பிளே ஆஃப் கூட்டிச்சென்ற குஜராத்

“போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று விளையாடி எனது ஆட்டத்தை அகலப்படுத்த முடியும் என்று நான் நம்பத் துவங்கியுள்ளேன். எனது பேட்டிங்கில் பெரிய மாற்றம் செய்யவில்லை. ஆனால் மனதளவில் முன்னேறி சுதந்திரமாக செயல்படுகிறேன். ஸ்பின்னர்களுக்கு எதிராகவும், 15வது ஓவருக்கு பின்பும் நன்றாக விளையாடுவது என்னுடைய ஆட்டத்தை முன்னேற்ற வேண்டும். கில் மற்றும் எனக்கு இடையே நிறைய புரிதல் இருக்கிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம். எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் நன்றாக விளையாடும் போது சிங்கிள், டபுள் ரன்கள் எடுப்பது முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -