ஐபிஎல் தொடரின் போது தோனி, விராட் கோலி கொடுத்த ஆலோசனை – கற்றுக்கொண்டதை பற்றி சாய் சுதர்சன் பேட்டி

- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக முதல் முறையாக வாங்கப்பட்டார். அதில் 5 போட்டிகளில் 145 ரன்கள் எடுத்து முதல் முறையாக அனைவரது கவனத்தை ஈர்த்த அவர் இந்த வருடம் 8 போட்டிகளில் 362 ரன்களை 141.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அசத்தலாக செயல்பட்டார். அதிலும் குறிப்பாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு எதிரான மாபெரும் இறுதி போட்டியில் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 96 ரன்கள் குவித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டுகளை அள்ளினார்.

IND vs PAK A Sai Sudharsan

- Advertisement -

அதே வேகத்தில் 2023 டிஎன்பிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் கோவை அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்ட அவர் அதிக ரன்கள் குவித்த 2வது வீரராக சாதனை படைத்தார். அப்படி அடுத்தடுத்த சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் அவருக்கு இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடு வாய்ப்பு கிடைத்தது.

ஜாம்பவான்களின் அறிவுரை:
அதில் நேபாள் அணிக்கு எதிராக முதல் முறையாக அரை சதமடித்து 58* (52) ரன்கள் எடுத்து அசத்திய அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்த சிக்ஸர்களுடன் சதமடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து 104* (110) ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும் ஃபைனலில் 29 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அவர் நோபாலில் நடுவரின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

ஆனாலும் 21 வயதிலேயே கிட்டத்தட்ட பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் வருங்காலத்தில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் உங்களுடைய அணிக்காக உங்களிடம் இருக்கும் திறமைகளை வைத்து என்ன செய்ய முடியும் என்பதை ஐபிஎல் தொடரில் பேசிய போது தோனி தமக்கு ஆலோசனையாக தெரிவித்ததாக சாய் சுதர்சன் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் மனதளவில் மிகவும் உறுதியாக இருந்து வெற்றிக்காக போராடும் தன்மையை விராட் கோலியிடமிருந்து ஐபிஎல் தொடரில் கற்றுக் கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “மஹி பாய் பற்றி அனைவருக்குமே தெரியும். எப்போதுமே மிகவும் அமைதியாக இருக்கக்கூடிய அவரிடம் பேசும் போதெல்லாம் உங்களிடம் இருக்கும் திறமையை வைத்து அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதையும் உங்களைப் பற்றியும் அதிகமாக தெரிந்து கொள்ளும்படி வலியுறுத்துவார்”

Sai-Sudharsan

“இதுவே நீங்கள் எதையாவது முயற்சித்து செய்வது அல்லது யாரைப் போன்றாவது இருக்க வேண்டும் என நினைப்பதை விட மிகவும் முக்கியமாகும். அதே போல விராட் கோலி எப்போதுமே மனதளவில் மிகவும் வலுவானவர். எனவே அவரிடமிருந்து நான் அந்தப் பண்பை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இதைப் பற்றி அவரிடம் நானும் நிறைய பேசியுள்ளேன்” என்று கூறினார். அப்படி ஜாம்பவான்களின் ஆலோசனைகளுடன் சிறப்பாக செயல்படும் சுதர்சன் அடுத்த ஐபிஎல் தொடரில் முழுமையான வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:IND vs WI : இதோட முடிஞ்சி போச்சி. அடுத்த 5 மாசத்துக்கு டெஸ்ட் மேட்ச்ன்ற பேச்சுக்கே இடமில்லை – வெளியான தகவல்

மேலும் இந்தியா ஏ அணிக்காக கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியுள்ள காரணத்தால் 2023 உலக கோப்பைக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு அவரைத் தேடி வரும் என்றும் நம்பப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் சீனாவில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கும் ருதுராஜ் தலைமையிலான இளம் இந்திய அணியில் முதன்மை வீரராக இடம் பிடிக்காவிட்டாலும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் சாய் சுதர்சன இடம் பிடித்துள்ளார். எனவே இதே செயல்பாடுகளை தொடரும் பட்சத்தில் அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு வெகு தொலைவில் இல்லை என்றால் மிகையாகாது.

Advertisement