இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் ஐந்தாம் நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 289 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டி மழையால் துவங்குவதில் தாமதமாகி வருகிறது. ஒருவேளை இந்த போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் வெல்லும்.
வேளையில் போட்டி நடைபெற்றால் எஞ்சியுள்ள 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கிலும் வெல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் மழை விடாமல் பெய்து வரும் வேளையில் நிச்சயம் இந்த போட்டி டிராவில் தான் முடிவடையும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்திய அணி இந்து தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் வெல்வது உறுதி.
இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் போன்ற டி20 தொடரில் பங்கேற்கவுள்ள வேளையில் அடுத்ததாக இந்திய அணிக்கு ஐந்து மாதங்கள் டெஸ்ட் போட்டியே கிடையாது என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள டி20 போட்டியில் பங்கேற்க இருக்கிறது. அதற்கு அடுத்து ஆசிய கோப்பை தொடர், 50 ஓவர் உலககோப்பை தொடர் என இந்திய அணி தொடர்ச்சியாக சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாட இருக்கிறது.
இதையும் படிங்க : வீடியோ : ரிஷப் பண்டின் பேட் மட்டுமல்ல. அவரைப்போன்றே ஒற்றைக்கையால் சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்த – இஷான் கிஷன்
மேலும் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதன் காரணமாக அடுத்த ஐந்து மாதங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐந்து மாதங்களில் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.