ரிஷப் பண்டின் பேட் மட்டுமல்ல. அவரைப்போன்றே ஒற்றைக்கையால் சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்த – இஷான் கிஷன்

Ishan-Kishan-and-Rishabh-Pant
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 183 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெடுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 289 ரன்கள் தேவை என்கிற நிலையில் இன்றைய ஐந்தாம் நாள் போட்டியானது மழையால் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் 34 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 52 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : IND vs WI : மழையால் 5ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம். ஐ.சி.சி யிடம் புதிய வேண்டுகோளை – முன்வைக்கும் ரசிகர்கள்

அதிலும் குறிப்பாக 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பண்ட் அடிப்பது போன்றே ஒற்றை கையால் சிக்சரை அடித்து அரை சதத்தை அவர் பூர்த்தி செய்திருந்தார். ஏற்கனவே ரிஷப் பண்ட் பேட்டை வைத்து விளையாடியிருந்த இஷான் கிஷனின் புகைப்படம் வைரலாகியிருந்த வேளையில் தற்போது ரிஷப் பண்ட் போன்றே இஷான் கிஷன் ஒற்றை கையால் அடித்த சிக்ஸர் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement