IND vs WI : மழையால் 5ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம். ஐ.சி.சி யிடம் புதிய வேண்டுகோளை – முன்வைக்கும் ரசிகர்கள்

Rain
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன் காரணமாக முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 438 ரன்களை குவித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 255 ரன்களை குவித்தது.

Jaiswal-1

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியானது 183 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அதன்படி தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்திய அணி 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு இன்னும் 289 ரன்கள் தேவை. அதேவேளையில் இந்திய அணி எஞ்சியுள்ள 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது. இந்த போட்டியை பொருத்தவரை இந்திய அணி வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

Rain

இந்நிலையில் இந்த போட்டியின் ஐந்தாம் நாளான இன்று போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டிரினிடாட் நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் ஒருவேளை இந்த போட்டியின் இன்றைய கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் போட்டி டிராவில் முடிவடையவும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இப்படி மழையால் போட்டிகள் பாதிக்கப்படுவதை கண்ட ரசிகர்கள் பலரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நடைபெறும் போட்டிகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. இதேபோன்று மழையால் சில போட்டிகள் பாதிக்கப்பட்டால் இறுதி நேரத்தில் அது அணியின் முடிவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க : 2024 டி20 உலக கோப்பை : அவர கண்டிப்பா எடுங்க ஆனா ரிங்குவை அவசரப்பட்டு செலக்ட் பண்ணிடாதீங்க – கம்பீர் ஓப்பன்டாக்

அதேபோன்று இப்படி எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் கிடைக்கும் புள்ளிகளை தவறவிடும் பட்சத்தில் அது கடைசி கட்ட ரேட்டிங் புள்ளிப்பட்டியலில் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். எனவே ஐசிசி இதுபோன்று மழையால் பாதிக்கப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு கூடுதலாக ஒரு ரிசர்வ் டேவை பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement