ஆரம்பத்திலேயே அடித்த அதிர்ஷ்டம்.. தெ.ஆ முதல் போட்டியிலேயே அறிமுகமான சுதர்சன்.. இந்திய பிளேயிங் லெவன் இதோ

Sai Sudharsan
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி போராடி சமன் செய்தது. இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஜோன்ஹஸ்பர்க் நகரில் துவங்கியது.

ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு 2023 உலகக் கோப்பைக்கு பின் முதல் முறையாக இந்தியா களமிறக்கும் இந்த ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். அந்த நிலைமையில் துவங்கிய போட்டியில் தங்களுடைய சொந்த மண்ணில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இந்திய அணி:
மறுபுறம் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாக களமிறங்குவார் என்று கேப்டன் ராகுல் அறிவித்தார். சமீபத்திய வருடங்களாகவே டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக சென்னைக்கு எதிரான மாபெரும் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அவர் சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்றார்.

அதனால் 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக அறிமுகமாகி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த அவர் இராணி கோப்பை உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து வந்தார். அதன் காரணமாக முதல் முறையாக இந்தியாவுக்காக இத்தொடரில் தேர்வான அவர் முதல் போட்டியிலேயே அதிர்ஷ்டமாக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு பெற்றுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய ரிங்கு சிங் இப்போட்டியில் வாய்ப்பு பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும் இத்தொடரில் கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஏற்கனவே ராகுல் தெரிவித்திருந்ததால் 2 அல்லது 3வது போட்டியில் ரிங்கு சிங் விளையாடுவார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க: ஆரம்பத்திலேயே அடித்த அதிர்ஷ்டம்.. தெ.ஆ முதல் போட்டியிலேயே அறிமுகமான சுதர்சன்.. இந்திய பிளேயிங் லெவன் இதோ

2023 தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும் ராகுல் தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணி பின்வருமாறு. கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கைக்வாட், சாய் சுதர்சன், ஸ்ரேயா ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார், குல்தீப் யாதவ்

Advertisement