ஐ.பி.எல் தொடரை விட டி.என்.பி.எல் தொடரில் அதிகவிலைக்கு ஏலம்போன சாய் சுதர்ஷன் – அப்படி என்ன இவரிடம் ஸ்பெஷல்?

Sai-Sudharsan
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை போன்றே தமிழகத்திலும் டி.என்.பி.எல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ள டி.என்.பி.எல் தொடரானது இந்த முறை ஏழாவது சீசனை எட்டியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய தமிழக வீரர்களுடன் வளர்ந்து வரும் வீரர்களும் இணைந்து இந்த தொடரில் விளையாடுவதால் தமிழக ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

TNPL Trophy

- Advertisement -

அதோடு tnpl தொடரின் மூலம் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற இது தமிழக இளம் வீரர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு என்பதால் அனைவரது மத்தியிலுமே இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது சீசனுக்கான ஏலம் நேற்று மாமல்லபுரத்தில் துவங்கியது.

இந்த இடத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

Sai Sudharsan

அதன்படி இந்த ஆண்டிற்கான முதல்வீரராக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை திருப்பூர் அணி 10.25 லட்சத்திற்கு வாங்கியது. அதேபோன்று இந்திய அணிக்காக விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற வீரர்கள் எல்லாம் 10 லட்சத்திற்கும் குறைவான தொகைக்கு வாங்கப்பட்டனர். ஆனால் இதில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக அணியின் இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை கடுமையான போட்டிக்கு மத்தியில் லைகா கோவை கிங்ஸ் 21.6 லட்சத்திற்கு வாங்கியது.

- Advertisement -

இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியுமே 70 லட்சம் வரை தான் செலவு செய்ய வேண்டும் என்கிற காரணத்தினால் 21 லட்சம் என்பது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் உச்ச தொகைக்கு ஏலம் போன வீரராகவும் சாய் சுதர்சன் தற்போது சாதனை படைத்துள்ளார்.

Sai Sudharsan 1

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட சாய் சுதர்சன் ஐபிஎல் ஏலத்திலேயே அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு தான் ஏலம் போகியிருந்தார். ஆனால் டி.என்.பி.எல் தொடரில் யாரும் எதிர்பாக்காத அளவு 21 லட்சத்திற்கு அவர் அதிக தொகைக்கு சென்றுள்ளார்.

- Advertisement -

இப்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் போட்டி போட்டு லைக்கா கோவை கிங்ஸ் அணி இவரை பெரிய தொகை கொடுத்து வாங்க காரணம் யாதெனில் : 21 வயதான சாய் சுதர்சன் இடதுகை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி அதிரடியாக ரன்களை குவிக்கும் இவர் தமிழக அணிக்காக ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் என அனைத்து தொடர்களிலும் மூன்று விதமான ஃபார்மட்டுகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேட்ச் வின்னராக திகழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க : விராட் – சாஸ்திரி செஞ்ச அந்த ஒரே தப்ப ரோஹித் – ட்ராவிட் செய்ய மாட்டாங்கன்னு நம்புறேன் – சர்ச்சையை பகிர்ந்த ஸ்ரீதர்

அதுமட்டும் இன்றி டி20 கிரிக்கெட்டில் இவரது அசாத்தியமான ஆட்டம் தற்போது மிளிர துவங்கியுள்ளது. கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கூட 5 போட்டிகளில் விளையாடிய அவர் 36 ரன்கள் சராசரியுடனும், 128 ஸ்ட்ரைக் ரேட் உடனும் 145 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன் காரணமாகவே அவர் மீது நம்பிக்கை வைத்து லைக்கா கோவை கிங்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement