விராட் – சாஸ்திரி செஞ்ச அந்த ஒரே தப்ப ரோஹித் – ட்ராவிட் செய்ய மாட்டாங்கன்னு நம்புறேன் – சர்ச்சையை பகிர்ந்த ஸ்ரீதர்

Sridhar
- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் இந்தியா வெற்றிகளைப் பெற்றாலும் தகுதியான இளம் வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்காததும் முழுமையான ஃபிட்னஸ் கடை பிடிக்காததால் முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைந்து வெளியேறுவதும் தொடர் கதையாகி வருகிறது. அதனால் நிறைய ரசிகர்கள் இதற்கு விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணியே பரவாயில்லை என்று கூறுவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் 2017 – 2021 வரை செயல்பட்ட அவர்கள் உலகக் கோப்பை வெல்லவில்லை என்ற ஒரு குறையை தவிர்த்து இருதரப்பு தொடர்களின் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர்.

shastri

- Advertisement -

மேலும் அவர்களது தலைமையில் ஃபிட்னஸ் அம்சங்களில் இந்திய கிரிக்கெட் அணி புதிய பரிணாமங்களை எட்டியது என்றே சொல்லலாம். இருப்பினும் அவர்களது தலைமையில் அம்பத்தி ராயுடுவின் கேரியர் முடிக்கப்பட்ட விதம் தான் ஒரு கருப்பு புள்ளியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2017 – 2018 காலகட்டத்தில் நம்பர் 4 இடத்தில் களமிறங்கி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 2019 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியானவராக காத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த இடத்தில் விளையாடுபவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருக்க வேண்டும் என்று விரும்பிய அந்த கூட்டணி தமிழகத்தின் விஜய் சங்கரை தேர்வு செய்தது.

ஸ்ரீதர் ஆதங்கம்:
இறுதியில் அந்த முடிவு இந்தியாவுக்கும் ராயுடுவுக்கும் விஜய் சங்கருக்கும் எந்தளவுக்கு மோசமாக அமைந்தது என்பதை ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் கடைசி நேரத்தில் எடுத்த அந்த அவசர முடிவு போல தற்போதைய ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா கூட்டணி எடுக்காது என்று நம்புவதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் இருந்த ஆர் ஸ்ரீதர் தனது சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “நாங்கள் எடுத்த பல முடிவுகள் விரும்பிய பலனை தரவில்லை என்றாலும் நேரமின்மை காரணமாக எடுத்த சில முடிவுகள் மிகப்பெரிய தவறாக அமைந்தது. அதாவது 2019 உலகக்கோப்பைக்கான நம்பர் 4 இடத்தை பற்றி நான் குறிப்பிடுகிறேன்”

“எங்களுக்கு 2015 முதல் அந்த முக்கிய இடத்தில் விளையாடுவதற்கான நபரை தேடுவதற்கான போதிய நேரம் இருந்தது. குறிப்பாக அந்த இடத்தில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் நல்ல தொடக்கத்தை அப்படியே பயன்படுத்தி 80 – 90 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் ரேட்டை கட்டுப்படுத்தி அதை ஃபினிஷர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒருவர் தேவைப்பட்டார். அந்தத் திறமை அனைவருக்கும் இயற்கையாக வராது. ஆனால் அந்த இடத்தில் நாங்கள் யாருக்குமே நிலையான வாய்ப்பை கொடுத்து செட்டிலாக விடவில்லை”

- Advertisement -

“குறிப்பாக நாங்கள் விரைவாக நல்ல முடிவுகளை விரும்பியதால் ஒருவர் 2 – 3 போட்டிகளில் சொதப்பியதும் உடனடியாக அடுத்த நபரை நோக்கி நகர்ந்து விட்டோம். அந்த தவறு ஏற்றுக் கொள்ள முடியாதது. அந்த காலகட்டத்தில் 2016 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தவிர்த்து ஒரே பேட்டிங் கோச் (சஞ்சய் பங்கர்) ஒரே பீல்டிங் கோச் (நான்) இருந்தோம். ரவி சாஸ்திரி மற்றும் பரத் அருண் ஆகியோர் அனில் கும்ப்ளேவுகுப்பின் ஒரு வருடம் தாமதமாக இணைந்தனர். ஆனால் அனைவரிடமும் அந்த இடத்துக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்குமாறு செய்தி வந்தது”.Sridhar

“இருப்பினும் அந்த இடத்தில் நாங்கள் ட்ரிக்கை தவற விட்டோம். அந்த இடத்தில் அம்பத்தி ராயுடு தவிர்த்து யாருமே 7 போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை. 2018 டிசம்பரில் இலங்கைக்கு எதிராக தோனி – கார்த்திக் அந்த இடத்தில் விளையாடினர். அதன்பின் தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற போது ரகானே 4வது இடத்தில் விளையாடினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ராகுல் விளையாடினார். மொத்தத்தில் அங்கே மிகப் பெரிய தவறு நடந்தது”

இதையும் படிங்க:IND vs AUS : உங்களுக்காக நான் ஹெல்ப் பண்ண தயார். ஆஸ்திரேலிய அணிக்காக சப்போர்டுக்கு வந்த – மேத்யூ ஹைடன்

“குறிப்பாக ரோகித், விராட், தவான் ஆகிய டாப் ஆர்டருக்கும் தோனி, பாண்டியா ஆகிய பினிஷர்களுக்கும் இடையே விளையாடும் 4வது இடத்தை நிரப்ப தவறியது ரவி சாஸ்திரி, சஞ்சய் பங்கர், அருண், விராட் அடங்கிய எங்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் அதே தவறை ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் செய்ய மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Advertisement