IND vs AUS : உங்களுக்காக நான் ஹெல்ப் பண்ண தயார். ஆஸ்திரேலிய அணிக்காக சப்போர்டுக்கு வந்த – மேத்யூ ஹைடன்

Hayden
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி தற்போது இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பினை இழந்துள்ளது.

IND vs AUS

- Advertisement -

இருப்பினும் எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க காத்திருக்கிறது. அதே வேளையில் இந்த இரண்டு போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி செல்லும் என்பதால் இந்த இரண்டு போட்டிகளுமே இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் மூன்று நாட்களிலேயே ஆஸ்திரேலிய அணி போட்டியை இந்திய அணியிடம் இழந்து விட்டது.

IND vs AUS Siraj SMith

குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணியிடம் எளிதில் சுருண்டு விடுகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவானான மேத்யூ ஹைடன் கூறுகையில் :

- Advertisement -

சரிவில் உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு நான் எந்த நேரத்திலும் உதவ தயார். எப்போது என்னிடம் எது குறித்து கேட்டாலும் நான் அவர்களுக்கு உதவ தயாராக உள்ளேன். என்னிடம் இருந்து அறிவுரை வேண்டும் என்றாலும் நான் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்க தயார். அதே போன்று இந்திய மைதானத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்று பயிற்சியையும் அறிவுரையையும் நான் வழங்க வேண்டும் என்றால் கூட அதனையும் வழங்க தயாராக காத்திருக்கிறேன்.

இதையும் படிங்க : எனக்காக இந்த 2 விஷயத்தை மட்டும் பண்ணுங்க ப்ளீஸ். இந்திய அணிக்கு அன்பு கட்டளையிட்ட – சுனில் கவாஸ்கர்

எனவே என்னுடைய உதவி எப்போது உங்களுக்கு வேண்டுமானாலும் என்னை அணுகுங்கள் என்று வெளிப்படையாக தனது விருப்பத்தை ஹைடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 1-ஆம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement