- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்ட வாஷிங்டன் சுந்தர்.. சாய் சுதர்சன் இஸ் பேக் – 3 ஆம் இடத்தில் கபடி ஆடும் இந்திய அணி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியானது கடந்த நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தி நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி தங்களது முதல் இன்னிங்சில் 489 ரன்களை குவித்து அசத்தியது.

மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்ட வாஷிங்டன் சுந்தர் :

தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி 109 ரன்களையும், மார்க்கோ யான்சென் 93 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் அடித்திருந்த இந்திய அணி இன்று தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் எடுத்த போது முதல் விக்கெட்டை இழந்தது.

முதல் விக்கெட்டாக கே.எல் ராகுல் 63 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்திருந்த வேளையில் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் எய்டன் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் யார் களமிறங்குவார்கள்? என்று எதிர்பார்ப்பு எழுந்த வேளையில் வாஷிங்டன் சுந்தர் பின்னுக்கு தள்ளப்பட்டு மீண்டும் சாய் சுதர்சன் மூன்றாம் இடத்தில் களமிறங்கியுள்ளார்.

- Advertisement -

கடந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ததால் இந்த போட்டியிலும் அவரே பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வியிருந்த வேளையில் மீண்டும் சாய் சுதர்சனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : கே.எல் ராகுலுக்கு அந்த பதவி கிடைத்ததில் ஆச்சரியமில்லை.. அவர் கரெக்ட் சாய்ஸ் தான் – முகமது கைப் கருத்து

இந்திய அணி மூன்றாம் இடத்தில் இப்படி சுழற்சி முறையில் வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி வருவது சரியானது கிடையாது என்று ஏற்கனவே பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -