இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அண்மையில் பி.சி.சி.ஐ மூலம் அறிவிக்கப்பட்டது.
கே.எல் ராகுலுக்கு அந்த பதவி குடுத்தது சரிதான் : முகமது கைப்
அதன்படி அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. அதன் காரணமாக கே.எல் ராகுல் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் மொத்தம் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியானது.
அதில் ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோரது பெயர் இடம்பெறாத வேளையில் அவர்களுக்கு பதிலாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் கே.எல் ராகுலை கேப்டனாக நியமித்தது சரிதான் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டது சரிதான். ஏனெனில் தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அவரை தவிர தொடர்ச்சியாக விளையாடும் அனுபவம் கொண்ட வீரர்கள் யாரும் இல்லை. ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து வெளியேறியதால் அவர்கள் மீண்டும் கேப்டன் பதவியை கைப்பற்ற நினைக்க மாட்டார்கள்.
அதேவேளையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற வீரர்கள் மிகவும் இளமையான வீரர்கள் என்பதாலும் போதிய அனுபவம் இல்லை என்பதாலும் அவர்களுக்கு அந்த பதவியை வழங்க முடியாது. ரிஷப் பண்ட்டும் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் எனவே இவர்களை எல்லாம் தாண்டி கே.எல் ராகுலுக்கு அந்த பதவியை வழங்கியது சரியான ஒன்றுதான்.
இதையும் படிங்க : காயமா? ஓய்வா? தெ.ஆ ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா இடம் பெறாதது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்
அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடர்களில் பல ஆண்டுகள் கேப்டன்சி செய்தவர். அதுமட்டுமின்றி இந்திய அணிக்காகவும் அவ்வப்போது கேப்டன்சி செய்துள்ளார். எனவே அவருடைய அனுபவம் மற்றும் முதிர்ச்சியை காரணமாக வைத்து அவரை கேப்டனாக நியமித்து சரியான ஒன்று என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



