காயமா? ஓய்வா? தெ.ஆ ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா இடம் பெறாதது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் இன்னும் மூன்று நாட்களில் முடிவடையுள்ள வேளையில் அடுத்ததாக நவம்பர் 30-ம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அந்த தொடருக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது.

ஹார்டிக் பாண்டியா ஒருநாள் தொடரில் இடம் பெறாதது ஏன்? :

அந்த வகையில் வெளியான இந்த ஒருநாள் அணியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறாததால் கே.எல் ராகுல் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் மொத்தம் 15 பேர் கொண்ட முழு வீரர்களின் பட்டியலையும் இந்திய அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு இடம் கிடைக்காதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பிள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்த ஹார்டிக் பாண்டியா தற்போது மீண்டும் முழு உடற்தகுதியை எட்டிய பின்னரும் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா ஏன் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை? அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்த தெளிவான தகவலை தற்போது பிசிசிஐ வழங்கியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது : ஹார்டிக் பாண்டியா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் நிச்சயம் டி20 தொடரில் இடம் பிடிப்பார். அதேபோன்று இந்த ஒருநாள் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்ட காரணம் யாதெனில் : அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் அவர் நமக்கு மிகவும் முக்கியமான வீரர்.

இதையும் படிங்க : பும்ராவை இப்படி யூஸ் பண்ணாதீங்க.. 2026 டி20 வேர்ல்டுகப் மனசுல இருக்கட்டும் – தினேஷ் கார்த்திக் வார்னிங்

எனவே அவரை அதுவரை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாகவே ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளோம். மற்றபடி அவருக்கு காயம் எல்லாம் கிடையாது. அவர் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்றும் பி.சி.சி.ஐ உறுதி செய்துள்ளது.

Advertisement