பும்ராவை இப்படி யூஸ் பண்ணாதீங்க.. 2026 டி20 வேர்ல்டுகப் மனசுல இருக்கட்டும் – தினேஷ் கார்த்திக் வார்னிங்

DK and Bumrah
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நவம்பர் 22-ஆம் தேதியான நேற்று கௌகாத்தி மைதானத்தில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இந்திய அணியால் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஆனால் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 489 ரன்களை குவித்தது.

பும்ராவை இப்படி பயன்படுத்துவது தவறு : தினேஷ் கார்த்திக்

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு வரை விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 480 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் அதிக ஓவர்களை ஜஸ்ப்ரீத் பும்ரா வீசியிருந்தார்.

- Advertisement -

இப்படி பும்ரா அதிக ஓவர்களை வீசியது தான் தற்போது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 32 ஓவர்களை வீசிய அவர் 10 மெய்டன்களுடன் 75 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். ஆனாலும் அவரது உடற்தகுதியை கணக்கில் கொண்டு குறைந்த அளவிலான ஓவர்களையே கொடுக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் ஜஸ்ப்ரீத் பும்ராவை இப்படி உபயோகிப்பது தவறு என்று வார்னிங் கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : பும்ரா இந்திய அணியை பொறுத்த வரை மிக முக்கியமான வீரர். அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்றாலும் டி20 தொடரில் நிச்சயம் விளையாடுவார்.

- Advertisement -

எனவே அவர் மீண்டும் ரெக்கவரி ஆகிவர சரியான ஓய்வு தேவை. இப்படி டெஸ்ட் போட்டிகளில் அவரை அளவுக்கு அதிகமாக உபயோகித்து விட்டால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவரது பணிச்சுமையை கணக்கில் கொண்டு தேவையான போது அவரை குறைந்த ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லாகவே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டும் இன்றி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் அவர் நமக்கு மிகவும் அவசியம்.

இதையும் படிங்க : 93 ரன்ஸ் 7 சிக்ஸ்.. ரிச்சர்ட்ஸ், ஹைடனை முந்திய யான்சென்.. இந்தியாவுக்கு எதிராக உலக சாதனை

எனவே அந்த டி20 உலக கோப்பை தொடரையும் கணக்கில் கொண்டு அவரை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே ஜஸ்ப்ரீத் பும்ராவை அந்த தொடரில் முழுமையாக பயன்படுத்தலாம். இதையெல்லாம் கணக்கில் கொண்டு அவரை கவனமாக பயன்படுத்த வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement