யாருமே என்னை நம்பல. ஆனா அவரு நம்புனாரு. அதுவே நான் ஐ.பி.எல்-ல் அசத்த காரணம் – சஹா வெளிப்படை

Saha-1
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹாவிற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகள் மிக எளிதாக அமையவில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருந்த இவர் ரிஷப் பண்ட் இன் சிறப்பான ஆட்டம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து அணியின் நிர்வாகமும் அவரை இனி அணியில் எடுக்காது என்றும் வருங்காலத்தில் இளைஞர்களை முன்னேற்ற அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது என்றும் தெளிவாகத் தெரிவித்து விட்டதால் கிட்டத்தட்ட இந்திய அணியில் அவரது இடத்தை இழந்துவிட்டார்.

Wriddhiman Saha 67

- Advertisement -

இப்படி ஒரு பக்கம் அவரை சுற்றி ஒரு மோசமான சூழல் நிலவிய வேளையில் ஐபிஎல் தொடர் ஏலத்திலும் முதல்நாளில் அவர் எந்த ஒரு அணியாலும் ஏல்ம் எடுக்கப்படாமல் இருந்தார். ஆனால் ஏலத்தில் இரண்டாவது நாளில் அவரை குஜராத் அணி ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருந்தது. இருப்பினும் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடும் வாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை. முதல் ஐந்து போட்டிகளில் அவர் பெஞ்சில் அமர்ந்து இருந்தார். அப்போது துவக்க வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் மேத்யூ வேட் மோசமாக விளையாடியதால் அவர் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டு விருத்திமான் சஹாவிற்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு குஜராத் அணியால் வழங்கப்பட்டது.

அதனை சரியாக பயன்படுத்திய சஹா முதல் ஐந்து போட்டிகளை தவற விட்டாலும் மீதமுள்ள 11 போட்டிகளில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூன்று அரை சதங்களுடன் 317 ரன்கள் குவித்து அசத்தினார். பவர்பிளே ஓவர்களின் போது அவர் கொடுக்கும் அதிரடியான துவக்கம் பல போட்டிகளில் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவியது. இப்படி யாருமே கண்டுகொள்ளாத ஒரு வீரராக இருந்து இந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு நல்ல துவக்கம் வீரராக இருந்த அவர் தனது பேட்டிங் சிறப்பாக இருந்ததற்கு காரணம் ஹர்திக் பாண்டியா தான் என்று கூறியுள்ளார்.

saha 2

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரின்போது ஏலத்தில் முதல் நாளில் நான் விற்கப்படாமல் போனேன். ஆனாலும் இரண்டாவது நாளில் குஜராத் அணி என்னை நம்பி ஏலத்தில் எடுத்தது. அப்போதே நான் சற்று தன்னம்பிக்கை பெற்று இருந்தாலும் துவக்க போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்தபோது குறிப்பிட்ட ஒரு போட்டிக்கு பின்னர் பாண்டியா என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் வந்து பேசினார்.

- Advertisement -

இனி நீங்கள் குஜராத் அணியின் தொடக்க வீரராக விளையாடப் போகிறீர்கள் நிச்சயம் உங்களது அனுபவம் எங்களுக்கு கை கொடுக்கும். நமது அணிக்காக நீங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி பாண்டியா எனக்கு அளித்த ஆதரவே எனக்கு மீண்டும் நம்பிக்கையை அளித்தது. அதனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் பாண்டியா என் மீது வைத்த நம்பிக்கையை நான் ஏமாற்றக் கூடாது என்பதற்காகவும் மிகச் சிறப்பாக விளையாடினேன்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : அடுத்த சீசனில் கோப்பையை வெல்வதற்கு ராஜஸ்தான் நீக்க வேண்டிய 6 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ஒரு கேப்டனாக ஹார்டிக் பாண்டியா குஜராத் அணியை கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது. இந்த ஐபிஎல் தொடரில் பாண்டியா என்மீது வைத்த நம்பிக்கையை யாரும் வைக்கவில்லை. அவருடைய நம்பிக்கை பொய்யாக கூடாது என்பதற்காகவே நான் அற்புதமாக பேட்டிங் செய்தேன் என சஹா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement