கடுமையான வலியையும் பொறுத்துக்கொண்டு விளையாடிய இந்திய வீரர் – பயம் எப்படி எல்லாம் வேலை செய்யுது

Saha
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 4-ஆம் நாள் முடிவில் இந்தப் போட்டியானது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ஏற்கனவே இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 345 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.

saha 2

- Advertisement -

பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின் மற்றும் சஹா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி ஒரு டீசண்டான ரன் குவிப்பை வழங்கியது. இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி 2-வது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் குவித்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை. அதே வேளையில் இந்திய அணி நியூசிலாந்து அணியின் மீதமுள்ள 9 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

saha 1

இந்நிலையில் இந்த போட்டியின் மூன்றாம் நாள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்ய வராத விக்கெட் கீப்பர் சஹா இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த வேளையில் 4 ஆவது நாளான இன்று பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். அணியில் ஸ்கோர் 103 ரன்களில் இருந்தபோது அஷ்வின் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது ஷ்ரேயாஸ் ஐயருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சஹா தனது அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழந்து வெளியேற அக்சர் பட்டேலுடன் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார்.

- Advertisement -

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் விளையாடிய அவர் 126 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 61 ரன்கள் குவித்தார். கடுமையான கழுத்து வலியிலும் அவரது இந்த போராட்டமான இன்னிங்ஸ் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இப்படி அவர் வலியை பொருத்துக்கொண்டு விளையாட மற்றொரு காரணமும் உள்ளது. அந்த காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் இவங்க 2 பேர்ல ஒருத்தருக்கு ஆப்பு இருக்கு – விவரம் இதோ

மூன்றாம் நாளில் இவர் வெளியில் அமர்ந்து இருந்தபோது அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்த இளம் வீரர் கே.எஸ்.பரத் சிறப்பான கீப்பிங்கை வெளிப்படுத்தினார். அதோடு இந்த இன்னிங்சிலும் சஹா பேட்டிங் செய்யாத பட்சத்தில் அடுத்து வரும் போட்டிகளில் பரத்க்கு வாய்ப்பு கிடைப்பது பிரகாசமாகி விடும். எனவே வலியையும் பொறுத்துக் கொண்டு தனது டெஸ்ட் எதிர்காலத்திற்காக பிரமாதமான ஆட்டத்தை சஹா வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement