ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் இவங்க 2 பேர்ல ஒருத்தருக்கு ஆப்பு இருக்கு – விவரம் இதோ

Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது அவர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவரால் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்று தெரியவந்துள்ளது.

Iyer-5

- Advertisement -

கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்ட காரணத்தினால் தனது அறிமுக வாய்ப்பைப் பெற்ற ஷ்ரேயாஸ் அய்யர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக இரண்டாவது போட்டியிலும் அவர் தனது வாய்ப்பை தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அவர் தக்க வைக்கப்படும் பட்சத்தில் ரஹானே அல்லது புஜாரா ஆகிய இருவரில் ஒருவர் வாய்ப்பை இழக்க நேரிடும். ஏனெனில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவருமே கடந்த பல தொடர்களாக மிடில் ஆர்டரில் ரன்களை குவிக்க திணறி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் சிறப்பாக விளையாடி நீண்ட நாள் ஆகிவிட்டது. மேலும் அவர்களின் வயது மூப்பு காரணமாகவும் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

Pujara

விராட் கோலி அணிக்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் அவர் விளையாடுவார். அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட வேண்டுமெனில் ரஹானே அல்லது புஜாரா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது உறுதி. ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த சிறப்பான ஆட்டத்தினால் தற்போது தேர்வு குழுவினர் அவரை அடுத்தடுத்து வரும் தொடர்களில் தேர்வு செய்வதா ? வேண்டாமா ? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : ப்ளீஸ் என்னை டீம்ல செலக்ட் பண்ணாதீங்க. தானாக முன்வந்து கோரிக்க வைத்த ஹார்டிக் பாண்டியா – ஏன் தெரியுமா?

அடுத்த போட்டி ஷ்ரேயாஸ் ஐயரின் சொந்த ஊரான மும்பையில் நடைபெறுவதால் நிச்சயம் அவர் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் இந்திய அணியின் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement