ப்ளீஸ் என்னை டீம்ல செலக்ட் பண்ணாதீங்க. தானாக முன்வந்து கோரிக்க வைத்த ஹார்டிக் பாண்டியா – ஏன் தெரியுமா?

Pandya6
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா தனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். ஆனால் 2018ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கூறலாம். ஏனெனில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹார்டிக் பாண்டியா கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி முன்புபோல அவரால் பேட்டிங்கிலும் அதிரடி காட்ட முடியவில்லை.

pandya

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வரும் பாண்டியா இந்திய அணியிலும் பினிஷர் ரோலில் களம் இறங்கி வந்தார். நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் ஆல்-ரவுண்டராக அவர் தேர்வு செய்யப்பட்டாலும் அந்த தொடர் முழுவதுமே அவர் 4 ஓவர்களை மட்டுமே வீசி இருந்தார். இதன் காரணமாக தற்போது இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் இனி பாண்டியா இந்திய அணிக்கு திரும்ப வேண்டுமெனில் முழு உடற்தகுதியுடன் பந்துவீசும் அளவிற்கு தயாராகி வந்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் தொடரிலும் அவர் இடம் பெறுவது சந்தேகம் என்று கூறப்பட்ட வேலையில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தேர்வு குழுவினருக்கு பாண்டியா ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

Pandya-2

அதன்படி தான் தற்போது முழு உடல் தகுதியுடன் இல்லை என்றும் தற்போது தன்னுடைய உடற் தகுதியை மேம்படுத்த தீவிரமாக பயிற்சி செய்ய இருப்பதாகவும் அதற்கு நேரம் தேவை என்பதனால் அதன் காரணமாக முழுவதும் உடற்தகுதி அடையும் வரை இந்திய அணியில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அனைத்து பிரச்சனையில் இருந்தும் வெளியேறி முழுவதுமாக திரும்பும் வரை அணியில் சேர்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இத்தனை ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனையை படைத்த – ஷ்ரேயாஸ் ஐயர்

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடரில் ஆடிய பாண்டியா அந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. அதனால் அவருக்கு மாற்றாக இளம்வீரரான வெங்கடேஷ் ஐயர் தற்போது இந்திய அணியின் ஆல் ரவுண்டராக நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement