இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 4-ஆம் நாள் முடிவில் இந்தப் போட்டியானது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ஏற்கனவே இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 345 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.

பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின் மற்றும் சஹா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி ஒரு டீசண்டான ரன் குவிப்பை வழங்கியது. இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி 2-வது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் குவித்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை. அதே வேளையில் இந்திய அணி நியூசிலாந்து அணியின் மீதமுள்ள 9 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத ஒரு அறிய சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அதன்படி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 303-வது வீரராக அறிமுகமான அவர் தனது முதல் இன்னிங்ஸில் 105 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட – இதுதான் காரணமாம்
இப்படி அறிமுக இன்னிங்சில் சதம் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸ் இன் போது 65 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தற்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாராட்டுகள் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



