WTC Final : ஃபைனலில் 2 இன்னிங்ஸிலும் சதமடிச்சு ஜெயிங்க – நட்சத்திர வீரருக்கும் இந்தியாவுக்கும் வாழ்த்து சொன்ன சயீத் அன்வர்

Saeed Anwar
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை முடிவு செய்யும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையும் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் ஓவர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது.

அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளில் இடம் வகித்த விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏற்கனவே லண்டன் பயணித்து வலைப்பயிற்சிகளை துவங்கியுள்ளனர். அதே போல பிளே ஆப் சுற்றுடன் வெளியேறிய அணிகளில் இடம் வகித்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மேலும் சில முக்கிய வீரர்கள் விரைவில் இங்கிலாந்துக்கு பயணித்து அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியினருடன் இணைய உள்ளனர்.

- Advertisement -

அன்வரின் வாழ்த்து:
அதே போல் குஜராத் மற்றும் சென்னை அணியில் உள்ள சுப்மன் கில், ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஃபைனல் முடிந்ததும் இங்கிலாந்து புறப்பட உள்ளனர். முன்னதாக 2019இல் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் தொடரில் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்று சட்டை போடு போட்டு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா சௌதம்டன் நகரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஃபைனலில் வழக்கம் போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

குறிப்பாக சச்சினுக்கு பின் கடந்த 10 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் கேப்டன் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்த காலகட்டத்தில் நடந்த அந்த ஃபைனலில் 44, 14 என 2 இன்னிங்ஸிலும் பெரிய ரன்களை எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் தற்போது கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடும் அவர் 2022 ஆசியக் கோப்பையில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி கடந்த 3 மாதங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் 3 இலக்க ரன்களை தொட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

சொல்லப்போனால் ஐபிஎல் 2023 தொடரில் பெங்களூரு அணிக்காக கடைசி 2 போட்டியில் அடுத்தடுத்த சதமடித்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் இந்த ஃபைனலில் சிறப்பாக செயல்பட்டு கடந்த முறை கேப்டனாக விட்ட கோப்பையை இம்முறை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விராட் கோலி நீண்ட நாட்கள் கழித்து வெள்ளை ஜெர்ஸியுடன் இந்தியாவுக்கு விளையாட ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதைப் பார்த்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் “இந்த மிகப்பெரிய போட்டியில் நீங்கள் 2 இன்னிங்ஸிலும் சதமடிப்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுக்கு என்னுடைய முழுமையான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் விராட்” என்று பதிலளித்துள்ளார். குறிப்பாக அந்த ஃபைனலில் ஆஸ்திரேலியாவை விட பரம எதிரியாக இருந்தாலும் தமக்கு மிகவும் பிடித்த வீரரான விராட் கோலி சதமடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல அவர் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : கனவுல கூட விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன், ரசிகர்களின் சேட்டையால் நவீன் அதிருப்தி – நடந்தது என்ன

அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் என்ன தான் ஆசிய கோப்பை சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் இருந்தாலும் இந்த ஃபைனலில் வெல்ல வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து ஜென்டில்மேன்னாக நடந்து கொண்ட அவருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

Advertisement