IPL 2023 : கனவுல கூட விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன், ரசிகர்களின் சேட்டையால் நவீன் அதிருப்தி – நடந்தது என்ன

Naveen Ul Haq.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட சண்டை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அந்த போட்டியில் கடைசி நேரத்தில் வெள்ளை கோட்டுக்கு உள்ளே இருந்தும் சிராஜ் ரன் அவுட் செய்ய முயற்சித்ததால் அதிருப்தியடைந்த ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் பயிற்சியாளராக இருந்து அதை விலக்காமல் தம்முடைய அணியின் வீரரை சீண்டுவது தமது குடும்பத்தை திட்டுவதற்கு சமம் என்ற வகையில் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு கௌதம் கம்பீர் சண்டையில் ஈடுபட்டார்.

மேலும் லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் சமாதானத்தால் பகைமையை மறந்த விராட் கோலி கை கொடுத்த போது பேசுவதற்கு எதுவுமில்லை என்ற வகையில் எதுவுமே சாதிக்காத நவீன் திமிராக சென்றது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இறுதியில் மூவருக்குமே தண்டனையாக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் குஜராத் வென்ற போது சஹா, ரசித் கான் ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டினார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நவீன் மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு தோற்பதை மாம்பழம் சுவைத்துக் கொண்டே பார்ப்பதாக பதிவிட்டு மீண்டும் வம்பிழுத்தார்.

- Advertisement -

மன்னிப்பு கேட்கல:
அத்துடன் அப்போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கிய ஜேசன் பேரன்ஃடாப்பை கௌதம் கம்பீர் பாராட்டி அந்த நெருப்பில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார். அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் நாயகனாக கருதப்படும் அவரை வம்பிழுத்ததை தாங்கிக் கொள்ள முடியாத இந்திய ரசிகர்கள் ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் லக்னோ விளையாடிய போதெல்லாம் “கோலி கோலி” என்று ஆரவாரம் செய்து நவீன் மற்றும் கம்பீருக்கு பதிலடி கொடுத்தனர்.

அதை விட பெங்களூரு தோற்று வெளியேறிய போது பிரபல ஆப்பிரிக்கன் பத்திரிக்கையாளர் சிரிக்கும் வீடியோவை பதிவிட்டு நவீன் மீண்டும் கலாய்த்தார். அதற்கு சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டரில் தோல்வியை சந்தித்த லக்னோ வெளியேறியதால் விஷ்ணு வினோத், குமார் கார்த்திகேயா உள்ளிட்ட 3 மும்பை வீரர்கள் மேஜையில் 3 மாம்பழத்தை வைத்து “இனிமேல் வாழ்வில் மாம்பழத்தை பார்க்க மாட்டேன், சாப்பிட மாட்டேன், வார்த்தையை கூட கேட்க மாட்டேன்” என்ற வகையில் ஒழுங்காக இருங்கள் என நவீனுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அதே போல சமூக வலைதளங்களிலும் ஏராளமான இந்திய ரசிகர்கள் மாம்பழத்தை வைத்து அவரை கலாய்த்து ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர்.

- Advertisement -

அந்த நிலையில் லக்னோ தோற்று வெளியேறிய அடுத்த நாளில் ட்விட்டரில் நவீன்உல்ஹக்66 என்ற கணக்கிலிருந்து “என்னை மன்னித்து விடுங்கள் விராட் கோலி சார்” என்ற ட்வீட் போடப்பட்டது. அதனால் ஒருவேளை இந்தியாவின் ஜாம்பவானுடன் தேவையின்றி மோதியதை நினைத்து மனதார நவீன் மன்னிப்பு கேட்கிறாரோ என்று அனைவரும் நினைத்தனர். அதிலும் குறிப்பாக நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை பிரதிபலிக்கும் ப்ளூ டிக் அந்த பெயரில் இருந்ததால் உண்மையாகவே அது நவீன் தான் என்று நினைத்த ரசிகர்கள் உடனடியாக 25,000 லைக்குகளையும் போட்டு ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் “நானாவது விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்க போறதாவது” என்ற வகையில் “ட்விட்டரில் போடப்பட்ட அந்த ட்வீட் மற்றும் அந்த கணக்கு” தம்முடையது கிடையாது என்று தம்முடைய அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள நவீன் “அது யாரோ ரசிகர் உருவாக்கிய போலியான கணக்கு” என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது நவீனுக்கு பதிலடி கொடுக்க நினைத்த ஏதோ ஒரு ரசிகர் அவரது பெயரில் கணக்கை உருவாக்கி எலான் மாஸ்க் கொண்டு வந்துள்ள புதிய ட்விட்டர் திட்டத்தின் படி பணத்தை கொடுத்து ப்ளூ டிக் வாங்கி அதிகாரப்பூர்வ கணக்காக மாற்றி இந்த சேட்டையான வேலையை செய்துள்ளார்.

இதையும் படிங்க:Csk vs Gt : சி.எஸ்.கே வுக்கு ராசியில்லாத அகமதாபாத் மைதானம். ஆனா அவங்களுக்கு நல்ல ராசி – விவரம் இதோ

இருப்பினும் அது போலியானது என்று தெரிய வந்ததால் தற்போது அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் “கனவிலும் மன்னிப்பு கேட்க போவதில்லை” என்ற வகையில் இந்த விஷயத்தில் நவீன்-உல்-ஹக் மறைமுகமாக சொன்னாலும் விராட் கோலிக்காக இந்தளவுக்கு இறங்கி அவரை ரசிகர்கள் தொல்லை கொடுத்து கலாய்த்துள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

Advertisement