Csk vs Gt : சி.எஸ்.கே வுக்கு ராசியில்லாத அகமதாபாத் மைதானம். ஆனா அவங்களுக்கு நல்ல ராசி – விவரம் இதோ

CSK vs GT
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டியானது மே 28-ஆம் தேதி இரவு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும் மொத்தவிருக்கின்றன.

CSK vs GT

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் குஜராத் அணி காத்திருக்கிறது. அதேபோன்று இந்த போட்டியில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக கோப்பையை வென்று அதிகமுறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

இதன்காரணமாக இந்த இறுதிப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த அகமதாபாத் மைதானம் இதுவரை சென்னை அணிக்கு ராசியில்லாத மைதானமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் இதுவரை அகமதாபாத் மைதானத்தில் சி.எஸ்.கே அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.

GT vs CSK MS Dhoni

ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த மைதானத்தில் விளையாடியுள்ள 9 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று நல்ல ரெக்கார்டை இந்த மைதானத்தில் வைத்துள்ளது. இதன் காரணமாக இந்த மைதானத்தில் சென்னை அணியை காட்டிலும் குஜராத் அணியின் கையே ஓங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : உங்கள பாத்தா 1999ல அறிமுகமான என்னை மாதிரி இருக்கு, அந்த 2 விசயத்துல முன்னேறுங்க – இளம் வீரருக்கு சேவாக் அட்வைஸ்

அதேபோன்று இதுவரை இவ்விரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 3 முறை குஜராத் அணியும், ஒருமுறை சி.எஸ்.கே அணியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement