எல்லாம் கரெக்ட்டா போகுதுன்னா சந்தோசப்படாதீங்க.. அந்த 2 விஷயத்தால் இந்தியா 2023 உ.கோ தோற்கலாம் – அன்வர் எச்சரிக்கை

Saeed Anwar
- Advertisement -

வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக நிலவுகிறது. அதற்கேற்றார் போல் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை தோற்கடித்து வெற்றி வாகை சூடிய இந்திய அணி வலுவான நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

அத்துடன் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார்கள். அது போக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடங்கில் தடுமாறிய சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டார் என்று கருதப்பட்ட சூரியகுமார் ஆகியோரும் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

- Advertisement -

அன்வர் எச்சரிக்கை:
அதே போல முதன்மை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று அசத்திய நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கின்றனர். மேலும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் ஆசிய கோப்பையில் ஷாஹீன் அப்ரிடி போன்ற இடது கை பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு தங்களுடைய தரத்தை நிரூபித்தனர்.

இப்படி சமீப காலங்களில் இந்திய அணியில் இருந்த அனைத்து குறைகளும் தற்போது கிட்டத்தட்ட முழுமையாக நிறையாகியுள்ளது என்றே சொல்லலாம். அதன் காரணமாகவே ஐசிசி தரவரிசையிலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா எப்போதுமே சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படும் என்பதால் 2023 உலகக் கோப்பையை வெல்லும் என்ற புதிய நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கிய டெயில் எண்டர் சீன் அபௌட் 54 (36) ரன்கள் குவித்து 150க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணியின் வெற்றியை 99 ரன்களாக குறைத்தார். அந்த வகையில் மிகவும் சிறிய பவுண்டரிகளை கொண்டுள்ள இந்திய மைதானங்களில் இந்திய பவுலர்கள் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நாங்க டாப் 4 ல வரனும்னு இந்தியாவுக்கு வரல. உலகக்கோப்பைல எங்க இலக்கு இதுதான் – பாபர் அசாம் அதிரடி பேட்டி

எனவே 2 விஷயங்களால் இந்தியா உலகக் கோப்பையை இழக்க நேரிடலாம் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “சீன் அபௌட் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்தியாவுக்கு மோசமாக அமைந்தது. இது போக இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கிறார்கள் என்று நான் சொல்வேன். ஆனால் அந்த சிறிய பவுண்டரிகள் மற்றும் சுமாரான டெத் பவுலிங் ஆகியன அவர்களுடைய வெற்றியை தடுக்கலாம் என்று கூடுதலாக என்னால் சுருக்கி சொல்ல முடியும்” என்று கூறினார்.

Advertisement