நாங்க டாப் 4 ல வரனும்னு இந்தியாவுக்கு வரல. உலகக்கோப்பைல எங்க இலக்கு இதுதான் – பாபர் அசாம் அதிரடி பேட்டி

Babar-Azam
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியானது ஆசிய கோப்பையில் தோல்வி அடைந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு அணிக்குள்ளேயும் சில காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் இந்தியா வருவதற்கான விசா பிரச்சனையும் முடிந்து தற்போது பாகிஸ்தான் அணி இந்தியா வருவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே தங்களது இலக்கு என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் இந்த உலக கோப்பை தொடரில் டாப் 4 சுற்றில் வருவது எங்களது இலக்கு கிடையாது.

ஏனெனில் டாப் 4 சுற்று என்பது எங்களுக்கு சிறிய இலக்காகவே இருக்கும். ஆனால் எங்களுடைய முழு இலக்கு இந்தியா வந்து உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். இந்த உலகக்கோப்பை தொடருக்கான பயணத்தை நாங்கள் நீண்ட நாட்களாகவே நினைத்து அதற்கு ஏற்றார் போல் தயாராகி வந்துள்ளோம்.

- Advertisement -

தற்போதுள்ள பாகிஸ்தான் அணி மிகவும் சிறப்பாகவும், வெற்றிக்கான தேடலிலும் உள்ளது. உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஏற்கனவே நாங்கள் இந்தியாவில் சிலமுறை விளையாடி உள்ளோம் எனவே எந்த ஒரு அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ள முடியாமல் எந்த மைதானமாக இருந்தாலும் சரி எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறோம்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாட வேண்டும் – ஹர்பஜன் சிங் கருத்து

தற்போதுள்ள பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். ஆனால் எதிர்பாராமல் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அவர் அணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாக அனுபவத்தின் அடிப்படையில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவரும் அணியுடன் இணைந்து உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் எனவும் பாபர் அசாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement