2 ஃப்ரேம் கட் பண்ணி ஏமாத்தி ஜெயிச்சுட்டாங்க, 2011 உ.கோ செமி பைனல் சச்சின் அவுட் பற்றி – முன்னாள் பாக் வீரர் குற்றசாட்டு

Sachin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முயற்சியுடன் களமிறங்க உள்ளது. மேலும் இத்தொடரில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெறும் போட்டியில் வென்று கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 1992 முதல் இதுவரை பங்கேற்ற 7 உலகக் கோப்பை போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ள இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.

முன்னதாக இதே போல சொந்த மண்ணில் நடைபெற்ற 2011 உலக கோப்பையில் மொகாலியில் நடைபெற்ற மாபெரும் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்ததை மறக்க முடியாது. குறிப்பாக அந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 85 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

இந்தியா ஏமாத்திட்டாங்க:
சொல்லப்போனால் அந்தப் போட்டியில் சச்சினுக்கும் இந்தியாவுக்கும் சில அதிர்ஷ்டங்கள் காத்திருந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அப்போட்டியில் அவர் 2 முறை கொடுத்த கேட்ச்சை கேப்டன் ஷாஹித் அப்ரிடி, கம்ரான் அக்மல் போன்றவர்கள் தவற விட்டது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. அதை விட 23 ரன்களில் இருந்த போது சயீத் அஜ்மல் வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அம்பயர் இயன் கோல்ட் அவுட் கொடுத்ததை எதிர்த்து சச்சின் ரிவ்யூ செய்தார்.

அப்போது 3வது நடுவர் சோதித்த போது லெக் ஸ்டம்ப்பை பந்து அடிக்காமல் சென்றது தெளிவாக தெரிந்த காரணத்தால் கொடுத்த அவுட்டை இயன் கோல்ட் திரும்ப பெற்றதால் தொடர்ந்து விளையாடிய சச்சின் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அந்த உலகக் கோப்பையில் தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஆர்எஸ் ரிவ்யூ டெக்னாலஜி அந்த குறிப்பிட்ட சமயத்தில் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இப்போதும் விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் அந்தப் போட்டியில் ரிவியூ செய்யும் போது 2 வீடியோ ஃப்ரேம் கட் செய்யப்பட்டு சச்சின் அவுட்டாகாதது போல் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதாக சயீத் அஜ்மல் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக அம்பயர் இயன் கோல்ட் அவுட் என்பதில் உறுதியாக இருந்தும் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு மாற்றப்பட்டதாக தெரிவிக்கும் அவர் கடந்த காலங்களில் இது பற்றி பேசியதை போலவே சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் விமர்சித்து பேசியது பின்வருமாறு.

“2011 உலக கோப்பையில் நான் இந்தியாவில் விளையாடியுள்ளேன். அதில் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட சர்ச்சையான தீர்ப்பு இன்னும் உங்களுக்கு நினைவிருக்கலாம். அதை நானும் அம்பயரும் இன்னும் அவுட் என்று சொல்வோம். ஏனெனில் அவர்கள் 2 ஃபிரேம்களை கட் செய்து ஸ்டம்ப்களில் அடிக்காததை போன்ற படத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயமாக பந்து மிடில் ஸ்டம்பில் அடித்திருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -

அது மட்டுமன்றி ஜாம்பவானான சச்சினை தம்முடைய கேரியரில் எதிர்கொண்ட 2 ஒருநாள் போட்டிகளிலும் அவுட் செய்ததை பற்றி நினைவு கூர்ந்த அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “சச்சின் ஒரு ஜாம்பவான். அவர் 30000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். அதனால் அவருடைய விக்கெட்டை எடுப்பது மிகப்பெரிய விஷயமாகும். அவருடன் விளையாடும் போது தான் சச்சினுக்கு எதிராக விளையாடுவது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை நான் புரிந்து கொண்டேன்”

இதையும் படிங்க:டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் – அசத்தல் விவரம் இதோ

“குறிப்பாக எம்சிசி கண்காட்சி போட்டியில் நான் அவருடன் விளையாடினேன். அவர் தான் என்னுடைய அணியின் கேப்டன். அப்போது அவர் உன்னுடைய “தூஷ்ரா பந்தை காட்டு” என்று சொன்னார். எப்போதுமே ஜாம்பவானான அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அதே சமயம் அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்ததில்லை. ஏனெனில் 2 முறை அவருக்கு எதிராக விளையாடிய நான் 2 முறையும் அவுட்டாக்கியுள்ளேன்” என்று கூறினார்.

Advertisement