டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் – அசத்தல் விவரம் இதோ

Starc
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ENG vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவிக்க இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்தது.

பின்னர் 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடியா ஆஸ்திரேலியா அணியானது 279 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் காரணமாக தற்போது 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை குவித்துள்ளது.

Starc 1

இதன் காரணமாக ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 257 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் தற்போது வரை 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அவர் வீழ்த்திய இந்த 5 விக்கெட்டுகளின் மூலம் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மாபெரும் சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : வாழ்க்கை ஒரு வட்டம், மிட்சேல் ஸ்டார்க் பிடித்த கேட்ச்சை மறுத்த அம்பயர்கள் – இந்திய ரசிகர்கள் பதிலடி

இதற்கு முன்னதாக மிட்சல் ஜான்சன் 313 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த வேளையில் அவரை பின்னுக்கு தள்ளி தற்போது ஸ்டார்க் 315 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். அதோடு ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பவுலர்கள் பட்டியலில் ஸ்டார்க் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement