வாழ்க்கை ஒரு வட்டம், மிட்சேல் ஸ்டார்க் பிடித்த கேட்ச்சை மறுத்த அம்பயர்கள் – இந்திய ரசிகர்கள் பதிலடி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இங்கிலாந்து விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஜூன் 28ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஜோஸ் டாங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 188/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் ஆஸ்திரேலியாவில் ஷார்ட் பிட்ச் வலையில் சிக்கி 325 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பென் டூக்கெட் 98 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் தடுமாற்றமாக செயல்பட்டு 279 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் ப்ராட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

வட்டமான வாழ்க்கை:
அதை தொடர்ந்து 371 என்ற இலக்கை துரத்துவதற்காக களமிறங்கிய இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 3, ஓலி போப் 3, ஜோ ரூட் 18, ஹரி ப்ரூக் 4 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 45/4 என சரிந்தது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் 29* ரன்களும் பென் டூக்கெட் 50* ரன்களும் எடுத்ததால் 4வது நாள் முடிவில் 114/4 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்துக்கு கடைசி நாளில் வெற்றி பெற 257 ரன்கள் தேவைப்படுகிறது. முன்னதாக இந்த போட்டியில் 4வது நாளின் மாலையில் கேமரூன் கிரீன் வீசிய 29வது ஓவரின் 5வது பந்தில் பென் டூக்கெட் அப்பர் கட் அடிக்க முயற்சித்தார்.

ஆனால் தவறாக கணித்து சுமாராக அடித்த காரணத்தால் ஃபைன் லெக் திசை நோக்கி பறந்த பந்தை அப்பகுதியிலிருந்து ஓடி வந்த மிட்சேல் ஸ்டார்க் மிகச் சரியாகக் கணித்து ஒரு காலை முட்டி போட்டு கச்சிதமாக பிடித்தார். அது நோபால் இல்லை என்று தெளிவாக தெரிந்ததால் ஆஸ்திரேலிய அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பென் டூக்கெட் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியனை நோக்கி நடந்தார். இருப்பினும் அப்போது பந்தை பிடித்த ஸ்டார்க் தரையில் உரசியது போல் தெரிந்தால் சந்தேகமடைந்த கள நடுவர்கள் 3வது நடுவரை நாடினர்.

- Advertisement -

அதை 3வது நடுவர் சோதித்த போது மிட்சேல் ஸ்டார்க் கச்சிதமாக பிடித்த போதிலும் பேலன்ஸ் செய்வதற்காக பந்தை தரையில் உரசியது தெளிவாக தெரிந்தது. குறிப்பாக அந்த சமயத்தில் பந்துக்கு கீழே அவருடைய கை விரல்கள் இல்லாதது நன்றாகவே தெரிந்தது. ஆனால் ஐசிசி 33.3 விதிமுறைப்படி ஃபீல்டர் பந்தை பிடிக்க ஆரம்பித்தது முதல் பிடித்து முடிக்கும் வரை பந்தின் மீது முழுமையான கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் கேட்ச் சரியாக பிடித்தாலும் அதை முழுமையாக்கும் போது ஸ்டார்க் முழுமையான கட்டுப்பாட்டை செலுத்தவில்லை.

அதே சமயம் தெளிவாக தரையில் உரசிய பந்தின் கீழ் கைவிரல்களும் இல்லாத காரணத்தால் அதை அவுட் இல்லை என்று 3வது நடுவர் அறிவித்தது இங்கிலாந்து ரசிகர்களை விண்ணதிற முழங்க வைத்தது. மறுபுறம் மிட்சேல் ஸ்டார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலியர்கள் ஏமாற்றத்தை சந்தித்த நிலையில் கேப்டன் பட் கமின்ஸ் நடுவரிடம் அதைப்பற்றி விவரத்தை கேட்டறிந்தார். முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சுப்மன் கில் கேட்ச்சை கேமரூன் கிரீன் பிடித்த போதிலும் கை விரல்களுக்கு நடுவே பந்து தரையில் தொட்டது தெளிவாக தெரிந்தும் இந்தியாவுக்கு பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது இறுதியில் தோல்வியில் மறைமுக பங்காற்றியது.

இதையும் படிங்க:அடிச்சி சொல்றேன்.. இந்தமுறை வேர்ல்டுகப்பை ஜெயிச்சிக்கப்போறது இந்த டீம் தான் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

அப்போது சாதகத்தை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு அதே மாதிரியான தீர்ப்பு கிடைக்காததை பார்த்த இந்திய ரசிகர்கள் இதுதான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் என சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement