1987 உலக கோப்பையில் பால் ஃபாயாக இருந்து இன்னிக்கு இந்த கௌரவத்தை வாங்கிருக்கேன் – பிசிசிஐ’க்கு சச்சின் நன்றி

Sachin Tendulkar 5
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 1996, 2011 போன்ற வருடங்களில் இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து இத்தொடரை நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய நாட்டிலேயே நடத்துவது ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று இந்தியா சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது. முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் தம்முடைய 16 வயது பிஞ்சு கால்களுடன் அறிமுகமாகி வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்ட சச்சின் டெண்டுல்கர் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்த இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை
பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

பால் ஃபாயாக சச்சின்:
இருப்பினும் ஒரு வீரரின் உச்சகட்ட சாதனையாக போற்றப்படும் உலகக் கோப்பையை 1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய 5 முயற்சிகளில் வெல்வதற்கு போராடிய அவர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வந்தார். ஆனாலும் மனம் தளராமல் போராடிய அவர் 2011 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரராக சாதனை படைத்து எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அத்துடன் அவருக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடிய யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற அனைத்து வீரர்களும் கடைசியில் அதை சாதித்ததும் சச்சினை தங்களுடைய தோள் மீது சுமந்து சொந்த ஊரான மும்பை மைதானத்தில் வலம் வந்தது மறக்க முடியாததாக அமைந்தது. அப்படி விடாமுயற்சியால் சாதித்த சச்சின் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் மீண்டும் அதே மேஜிக்கை சொந்த மண்ணில் இந்தியா நிகழ்த்துமா என்பதை பார்ப்பதற்காக தயாராகி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவின் ஜாம்பவானாக திகழும் பாரத ரத்னா விருது வென்ற அவருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இத்தொடரை நேரில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்து அதற்கான தங்க டிக்கெட்டையும் வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட சச்சின் டெண்டுல்கர் 1987 உலக கோப்பையில் பவுண்டர் எல்லையில் பந்துகளை பொறுக்கி போடும் பையனாக இருந்தது முதல் தற்போது இந்த உலகக் கோப்பைக்கான தங்க டிக்கெட்டை வாங்கியது வரை தம்முடைய பயணத்தை பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஒன்னும் செய்ய முடியாது, இந்திய அணியில் நீங்க இடம் பிடிக்க அது தான் ஒரே வழி – சஞ்சு சாம்சனுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

“1987 உலகக் கோப்பையில் பந்து பொறுக்கி போடும் சிறுவனாக இருந்து 1992 முதல் 2011 வரை 6 உலகக் கோப்பையில் போட்டியிட்டு தற்போது 2023 உலகக்கோப்பை காண தங்க டிக்கெட்டை பெற்றுள்ளேன். இது உண்மையில் கனவுகளில் பின்னப்பட்ட ஒரு பயணமாகும். இந்த பயணம் இன்னும் எனக்குள் உற்சாகம் குறையாமல் இருக்கிறது” என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்ற மேலும் சில நட்சத்திரங்களுக்கு பிசிசிஐ தங்க டிக்கெட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement