கங்குலி ஒரு நல்ல கேப்டனா இருந்ததுக்கு அவரிடம் இருந்த இந்த தன்மை தான் காரணம் – சச்சின் புகழாரம்

Sachin-and-Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பி.சி.சி.ஐ-யின் தலைவருமான சவுரவ் கங்குலி நாளை தனது (50-ஆவது) ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்கான கொண்டாட்டத்தை தற்போது துவங்கியுள்ள கங்குலியின் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் கங்குலியின் இந்த பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Ganguly

- Advertisement -

அதோடு ஏற்கனவே கங்குலி தனது நெருங்கிய நண்பரான சச்சின் மற்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் கங்குலியை பற்றி தற்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் :

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி. அவர் அப்படி மிகச் சிறந்த கேப்டனாக இருந்ததற்கு காரணம் யாதெனில் வீரர்களுக்கு அவர் கொடுக்கும் சுதந்திரமும், வீரர்களிடம் இருந்து எவ்வாறு சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர முடியும் என்ற தன்மையும் தான்.

வீரர்களை அவர் சரியாக வழிநடத்தி அவர்களை சுமூகமாக வைத்திருந்ததாலயே அவர் நல்ல கேப்டனாக செயல்பட முடிந்தது. அதோடு இந்திய அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்ற போது இந்திய அணி ஒரு மாறுதலான கட்டத்தில் இருந்தது. அடுத்த கட்ட வீரர்களும் இந்திய அணிக்கு தேவைப்பட்டனர்.

- Advertisement -

அப்படி ஒரு முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்த ஒரு அணியை சரியான தளத்தினை அமைத்து நல்ல அணியாக முன்னேற்றியவர் கங்குலி. அவர் தேர்வு செய்த வீரர்களில் சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் மற்றும் ஆசிஸ் நெஹ்ரா போன்ற வீரர்கள் பின்னாளில் மிகப்பெரிய வீரர்களாக மாறினர்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என்ற சச்சினின் சாதனையை அந்த இங்கி வீரர் எளிதில் முறியடிப்பார் – வாசிம் ஜாபர் கருத்து

ஒரு வீரருடைய திறமையை எவ்வாறு கண்டறிவது, அவர்களுக்கு எவ்வாறு ஆதரவு கொடுப்பது என்பது கங்குலிக்கு நன்றாக தெரியும். அதேபோன்று அவர் வீரர்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் சரியாக கொடுப்பார் என கங்குலி குறித்து சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement