டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என்ற சச்சினின் சாதனையை அந்த இங்கி வீரர் எளிதில் முறியடிப்பார் – வாசிம் ஜாபர் கருத்து

Wasim-Jaffer-and-Sachin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளராகவும், 100 சதங்களை விளாசிய ஒரேயொரு வீரராகவும் இன்றளவும் சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்து வருகிறார். இந்திய அணிக்காக 1989 ஆம் ஆண்டு அறிமுகமான சச்சின் 2013ம் ஆண்டு வரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் அவரது இந்த முதலிடத்தை இங்கிலாந்து வீரரால் முறியடிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

Sachin Tendukar Muralitharan

- Advertisement -

அதன்படி இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் முன்னணி வீரரான ஜோ ரூட் அந்த அணியின் வெற்றிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 142 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்திருந்தார்.

ஜோ ரூட் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த சதம் அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட 28-ஆவது சதமாகும். மேலும் சமகால கிரிக்கெட்டில் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் இந்த தொடரில் மட்டும் 2 சதங்கள் உட்பட 737 ரன்களை குவித்துள்ளார்.

Joe Root

அதோடு இந்த ரன்களுடன் சேர்த்து தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்த ஜோ ரூட் தற்போது 10,458 ரன்கள் உடன் உள்ளார். இந்நிலையில் சச்சினில் அதிக ரன்களை சாதனையை ஜோ ரூட் முறியடித்து விடுவார் என்று பேசியுள்ள வாசிம் ஜாபர் கூறுகையில் :

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் சீக்கிரமாகவே ஓய்வு பெற்றுவிடுவார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் தற்போது 31 வயதே ஆன ஜோ ரூட் இன்னும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்பதனால் நிச்சயம் சச்சினின் சாதனையை அவரால் முறியடிக்கும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நாட்டுக்காக விளையாட இடையிடையே தொடர்ச்சியாக ஓய்வு கேட்கும் சீனியர் வீரர்கள் – பிசிசிஐ அதிருப்தியால் பாயும் நடவடிக்கை

அவர் கூறியபடியே தற்போது 31 வயதில் 121 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 10,458 ரன்கள் குவித்துள்ளதால் இன்னும் எஞ்சியுள்ள 5000 ரன்களை அவர் கூடிய விரைவில் அடித்து சச்சின் சாதனையை தகர்க்க அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement