நாட்டுக்காக விளையாட இடையிடையே தொடர்ச்சியாக ஓய்வு கேட்கும் சீனியர் வீரர்கள் – பிசிசிஐ அதிருப்தியால் பாயும் நடவடிக்கை

rohith
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்த இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் மட்டுமே செய்தது. கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் முதல் 3 நாட்களில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 15 வருடங்கள் கழித்து அந்நாட்டில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவவிட்டது. இதை தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிராக துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

அதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் பட்லர் தலைமையில் ஜேசன் ராய், மொய்ன் அலி போன்ற தரமான வீரருடன் டெஸ்ட் போட்டியை போலவே இந்தியாவை மண்ணைக் கவ்வ வைக்க இங்கிலாந்து தயாராகியுள்ளது. இருப்பினும் இம்முறை அதை சமாளிக்க கேப்டன் ரோகித் சர்மா திரும்பியுள்ளதால் அவரது தலைமையில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்களுடன் டெஸ்டில் கிடைத்த தோல்விக்கு டி20 தொடரில் வென்று பதிலடி கொடுக்க இந்தியாவும் போராட உள்ளது.

சீனியர்கள் மீண்டும் ஓய்வு:
இத்தொடருக்கு பின் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முடித்துக் கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதில் முதலாவதாக வரும் ஜூலை 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி மட்டும் நேற்று பிசிசிஐ வெளியிட்டது. அதில் ரோகித் சர்மா ஓய்வெடுப்பதால் மற்றொரு நட்சத்திரம் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட உள்ளார். அதேபோல் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Rohith

ஆனால் இந்த அறிவிப்பு பல ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2022 தொடருக்குப்பின் நிகழ்ந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஓய்வெடுத்த இவர்கள் (பண்ட், பாண்டியா தவிர) இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளார்கள். அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 6 போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு மீண்டும் ஓய்வெடுக்கும் அளவுக்கு அதிகப்படியான போட்டிகளில் விளையாடி விட்டார்களா என்ற கேள்விகள் எழுகின்றன.

- Advertisement -

பிசிசிஐ அதிருப்தி:
அதிலும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ரோகித் சர்மா 6 போட்டியில் விளையாடி விட்டு மீண்டும் ஓய்வெடுத்தால் எப்படி அவரது தலைமையில் தரமான வீரர்கள் செட்டாகி உலக கோப்பையை இந்தியாவால் வெல்ல முடியும் என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதில் ரிஷப் பண்ட் மட்டுமே ஓய்வெடுக்காமல் பெரும்பாலான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்படி வீரர்கள் ஓய்வெடுப்பது அவர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு தேர்வுகுழு மற்றும் பிசிசிஐ முடிவெடுப்பதாக அனைவரும் கருதுகின்றனர்.

Rohith-2

ஆனால் அணியை தேர்வு செய்யும் போது சீனியர் வீரர்கள் ஓய்வு கேட்பதாலேயே அதை மறுக்க முடியாமல் கொடுக்கப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் நாட்டுக்காக தொடர்ச்சியாக விளையாடாமல் இடையிடையே இப்படி சீனியர் வீரர்கள் ஓய்வு கேட்பதால் பிசிசிஐ அதிருப்தியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதுபற்றி முக்கிய பிசிசிஐ அதிகாரி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அணி தேர்வுக்காக நடக்கும் ஒவ்வொரு மீட்டிங்கிலும் பணிச்சுமை பிரச்சனை எழுப்பப்படுகிறது. ரோகித், விராட், பாண்டியா, பும்ரா, ஷமி போன்ற வீரர்கள் எப்போதும் ஓய்வு கேட்கிறார்கள். இந்த வீரர்கள் ஓய்வெடுப்பதில் எப்போதும் விருப்பம் கொண்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென்று பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய அணி நிர்வாகம் வாயிலாக தேர்வாளர்களுக்கு பரிந்துரை அனுப்புகிறார்கள்”

Rohith

“இந்த வீரர்கள் ஒவ்வொரு 2-வது தொடரிலும் ஓய்வு கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் பிசிசிஐயின் முதன்மை சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். ரோகித் முழுநேர கேப்டன் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவுக்காக முழுமையாக விளையாடவில்லை. பாண்டியா இப்போதுதான் மீண்டும் விளையாட துவங்கியுள்ளார். பும்ரா, ஷமி ஆகியோர் தாங்கள் விரும்பும் போட்டிகளை விளையாடுகின்றனர். விராட் கோலிக்கும் இடையிடையே ஓய்வுகள் கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் இந்த அம்சங்கள் நமது அணி செட்டாவதை தடுமாற்றமடைய வைக்கிறது. ரிஷப் பண்ட் மட்டுமே கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்” என ஆதங்கத்துடன் பேசினார். அதாவது தங்களுக்கு ஓய்வு கொடுக்குமாறு பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரைகளுடன் சீனியர் வீரர்கள் வருவதால் தேர்வுகுழுவும் வேறு வழியின்றி ஓய்வு கொடுப்பதாக பிசிசிஐ தெரிவிக்கிறது. ஆனால் அனைவரும் இப்படி இணைந்து விளையாடாமல் நேராக உலக கோப்பையில் சேர்ந்து விளையாடலாம் என்று நினைத்தால் எப்படி வெற்றி பெற முடியும் என்று பிசிசிஐ கவலை தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : எல்லாம் போதும். இனிமேல் ரன்கள் அடித்தால்தான் இடம் – விராட் கோலிக்கு எதிராக திரும்பும் அம்பு, வெளியான தகவல் இதோ

எனவே இதைக் கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ரோகித் சர்மா, பாண்டியா போன்ற வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிய வருகிறது.

Advertisement