அவங்க எப்படி இதை பண்ணாங்கன்னு என்னால நம்பவே முடியல. நெதர்லாந்து அணியை பாராட்டிய – சச்சின் டெண்டுல்கர்

Sachin-NED
- Advertisement -

நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியானது பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

அவர்கள் பெற்ற இந்த ஒரு வெற்றி மற்ற அணிகளுக்கும் பெரிய அணியை வீழ்த்த முடியும் என்ற ஒரு நம்பிக்கையை தந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன்னர் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 43-ஓவர்களாக குறைக்கப்பட்டது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் 78 ரன்களையும். வான்டெர் மெர்வ் 29 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. நெதர்லாந்து அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் எட்வர்ட்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி தங்களது முதல் வெற்றியை இந்த உலகக்கோப்பை தொடரில் பதிவு செய்துள்ளது. அதேவேளையில் முதலிடத்திற்கு முன்னேறும் பிரகாசமான வாய்ப்பு இருந்த தென்னாபிரிக்க அணி தற்போது ஒரு தோல்வியை பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய நெதர்லாந்து அணி குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : இந்த உலகக் கோப்பை தொடரானது பல்வேறு சுவாரசியமான முடிவுகளை தந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் அந்த அணி 140 ரன்களுக்கு 7 விக்கெட் இருந்தபோது போராடி பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றதை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா – வங்கதேசம் மோதும் புனே மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

மேலும் இந்த போட்டியில் நெதர்லாந்து அணி வீரர்கள் எளிதில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் தென்னாப்பிரிக்க அணி வீரர்களை அழுத்தத்திற்கு கொண்டு வந்து களத்தில் சிறப்பாக செயல்பட்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது எனவும் இந்த வெற்றியை அவர்கள் மறக்க மாட்டார்கள் என்றும் சச்சின் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement