நீங்க எப்போதுமே வின்னர் தான்.. 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வினை மனதார வாழ்த்திய – சச்சின் டெண்டுல்கர்

Sachin-and-Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து அசத்திய வேளையில் தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது அவர்களது முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இதன் காரணமாக தற்போது இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிகச் சிறப்பான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் 89 ரன்கள் சேர்த்திருந்த வேளையில் முதல் விக்கெட்டாக ஜாக் க்ராவிலியை வீழ்த்திய தமிழக வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-ஆவது விக்கெட்டை பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அஸ்வின் இந்த போட்டியின் முதல் இன்னிங்சின் முதல் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்டை பதிவு செய்ததோடு சேர்த்து உலக அளவில் 500 டெஸ்ட் விக்கெட்டை வேகமாக வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்தார்.

அதோடு இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளேவிற்கு அடுத்து 500 விக்கெட்டுகளை வீழ்த்தும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். அவரது இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஒரு பதிவினை வெளியிட்டு அஸ்வினை வாழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பதெல்லாம் ஒரு மிகப்பெரிய மைல்கள். மில்லியனில் ஒரு பவுலர் அதனை சாதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவு செய்தவுடன் “in ashWIN the spinNER” என்று குறிப்பிட்டு அதில் எப்போதுமே WINNER இருக்கிறது என்றும் வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஏன்யா இப்படி பண்ற.. ரவீந்திர ஜடேஜா செய்த தவறை சுட்டிக்காட்டி கிண்டல் செய்த ரோஹித் சர்மா – நடந்தது என்ன?

சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வரும் வேளையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களில் தமிழ்நாட்டின் பெயரை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற அஸ்வினை வாழ்த்தி தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement