ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றது.
அதனைத்தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அதன்படி நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும், சர்பராஸ் கான் 62 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடும் இங்கிலாந்து அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை எடுத்துள்ளது.
மேலும் 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை பிப்ரவரி 17-ஆம் தேதி மூன்றாம் நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய போட்டியின் போது களத்திலேயே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜாவை கிண்டல் செய்த ஒரு விடயம் ஸ்டம்ப் மைக் மூலமாக வெளியாகி ரசிகர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியின் போது 4 ஓவர்கள் மட்டுமே வீசிய ஜடேஜா அதில் 2 நோ பால்களை வீசினார்.
இதையும் படிங்க : கங்குலி டிராவிட் சேர்ந்து நிகழ்த்திய சாதனையை நூலிழையில் தவறவிட்ட சர்பராஸ் ஜுரேல் ஜோடி – விவரம் இதோ
அதனை கவனித்த ரோகித் சர்மா கடுப்பாகி இருந்தாலும் அவரை கிண்டல் செய்யும் விதமாக “நீ ஐபிஎல் தொடரில் கூட இத்தனை நோ பால் வீசியது கிடையாது”. அதனால் இதை “டி20 கேம் என்று நினைத்துக் கொண்டு பந்து வீசு” என்று சிரித்தபடியே கிண்டல் செய்தார். இந்த உரையாடல்கள் ஸ்டம்ப் மைக் மூலம் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.