அந்த 2 பேரும் இந்தியாவை சாய்ச்சுட்டாங்க.. அந்த 250 ரன்ஸ் தான் நம்ம தோல்விக்கு காரணம்.. சச்சின் ஆதங்கம்

Sachin Tendulkar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த உதவியுடன் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அபாரமாக செயல்பட்டு 436 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கே.எல். ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுத்தனர். அதனால் இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றது வரை போட்டியும் வெற்றியும் இந்தியாவின் கையில் இருந்தது. ஏனெனில் அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் ஜோ ரூட் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 164/5 என தடுமாறியது.

- Advertisement -

சச்சின் ஆதங்கம்:
ஆனால் அப்போது நங்கூரமாக நின்ற ஓலி போப் அபாரமான சதமடித்து 196 ரன்கள் குவித்து போட்டியை தலைகீழாக மாற்றினார். போதாகுறைக்கு அவருடன் சேர்ந்து பென் ஃபோக்ஸ் 34, ரெஹன் அஹமத் 28, டாம் ஹார்ட்லி 34 ஆகிய லோயட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு முக்கிய ரன்களை எடுத்து இங்கிலாந்தை 420 ரன்கள் குவிக்க வைத்தனர்.

இறுதியில் 231 ரன்களை சேசிங் செய்த இந்தியா 4வது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய ஹைதராபாத் மைதானத்தில் திணறலாக பேட்டிங் செய்து 202 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்தின் இந்த வெற்றிக்கு அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை சாய்த்து முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் இப்போட்டியில் 164/5 என சரிந்த பின்பும் இங்கிலாந்து 420 ரன்கள் குவிக்கும் அளவுக்கு இந்தியாவின் பவுலிங் சுமாராக இருந்ததே தோல்விக்கு காரணமானதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதே சிறந்த கதையாக இருக்கும். ஓலி போப் அது போன்ற கதையை அவருடைய அணிக்கு கொடுத்துள்ளார். தன்னுடைய அணி சரிந்த போது நேர்மறையாக சரியான ஷாட்டுகளை தேர்வு செய்த அவர் நல்ல ஃபுட் வொர்க்கை பயன்படுத்தி எங்களுடைய ஸ்பின்னர்களுக்கு எதிராக அசத்தினார். கண்டிப்பாக இந்திய மண்ணில் இது ஒரு இங்கிலாந்து வீரரின் சிறப்பான செயல்பாடாகும்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை பார்த்து தான் செகன்ட் இன்னிங்ஸ்க்கு ஸ்கெட்ச் போட்டேன் – பென் ஸ்டோக்ஸ் வெளிப்படை

“முதல் போட்டியை வெல்வதற்கு போராடிய இங்கிலாந்து இத்தொடருக்கு ஆர்வமான துவக்கத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழந்த பின் முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்து 250 ரன்கள் எடுத்தது எங்களுக்கு தோல்வியை கொடுத்தது. மறுபுறம் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்து கடைசியில் தோற்ற இந்தியா அடுத்த போட்டிக்கு முன்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. இப்போட்டியில் டாம் ஹார்ட்லி மற்றும் ஓலி போப் ஆகியோர் சிறந்த வீரர்களாக இருந்தனர்” என்று கூறினார்.

Advertisement