ரோஹித் சர்மாவை பார்த்து தான் செகன்ட் இன்னிங்ஸ்க்கு ஸ்கெட்ச் போட்டேன் – பென் ஸ்டோக்ஸ் வெளிப்படை

Stokes-and-Rohit
- Advertisement -

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 246 ரன்களை மட்டுமே குவிக்க இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்திய அணி நிச்சயம் இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவ்வேளையில் இரண்டாவது இன்னிங்சின் போது இங்கிலாந்து வீரர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 420 ரன்களை குவிக்கவே 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட துவங்கியது. அப்போதும் நிச்சயம் இந்திய அணி இந்த இலக்கை எட்டிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள்.

ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தங்களது பந்துவீச்சாளர்களை அருமையாக சுழற்சி முறையில் பயன்படுத்தியும், வீரர்களை சரியான இடத்தில் பீல்டிங்கில் நிறுத்தியும் இந்திய அணி தோல்வியை சந்திக்க ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் வெளிப்படையாகவே ரோகித்திடம் கற்றுக் கொண்ட சில விடயங்களை பற்றி அதில் பேசியிருந்தார்.

- Advertisement -

அதன்படி அவர் பேசுகையில் : முதல் இன்னிங்சில் நிறைய தவறுகளை செய்து விட்டோம். ஆனால் நான் எப்போதுமே போட்டியை கூர்மையாக உற்று நோக்குவேன். அந்த வகையில் முதல் இன்னிங்சில் இந்திய அணி எவ்வாறு பந்து வீசியது? ரோகித் சர்மா எவ்வாறெல்லாம் பீல்டர்களை செட்டப் செய்து இருந்தார்? என்பதை கவனித்தேன். அதோடு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் எவ்வாறு பந்து வீசினார்கள்? என்பது போன்ற பல்வேறு விடயங்களை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டேன்.

இதையும் படிங்க : 92 வருடம்..106 போட்டிகளில் சந்திக்காத அவமானம்.. ஹைதெராபாத்தில் இந்தியா வரலாறு காணாத தோல்வி

அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவிடம் நான் கவனித்த விடயங்களை எல்லாம் பயன்படுத்தி பார்த்தேன் என்று கூறியிருந்தார். அதேபோன்று போட்டியை வர்ணனை செய்த சில தமிழ் வர்ணனையாளர்களும் : முதல் இன்னிங்சில் செய்த தவறுகளை இரண்டாவது இன்னிங்சில் ஸ்டோக்ஸ் திருத்தியுள்ளார் என்றும் அவரது கேப்டன்சியை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement