92 வருடம்..106 போட்டிகளில் சந்திக்காத அவமானம்.. ஹைதெராபாத்தில் இந்தியா வரலாறு காணாத தோல்வி

IND vs ENG 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. ஜனவரி 25ஆம் தேதி vதுவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

- Advertisement -

அவமான தோல்வி:
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கே.எல். ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து ஜோ ரூட் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 163/5 என தடுமாறியது. அப்போது கண்டிப்பாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு ஓலி போப் அபாரமான சதமடித்து 196 ரன்கள் விளாசி 420 ரன்கள் குவிக்க உதவினார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 231 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் 4வது நாளில் சுழலுக்கு அதிக சாதகமாக மாறிய ஹைதராபாத் பிட்ச்சில் ஜெய்ஸ்வால், ரோஹித், கில், ஸ்ரேயாஸ், ராகுல், ஜடேஜா உள்ளிட்ட அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் குறைந்த ரன்களில் அவுட்டாக்கி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் கடைசியில் அஸ்வின் மற்றும் பரத் தலா 28 ரன்கள் எடுத்து போராடியும் 202 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி வென்ற இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் இதற்கு முன் 4 வெற்றி 1 டிராவை மட்டுமே சந்தித்த இந்தியா ஹைதராபாத் மைதானத்தில் முதல் முறையாக தோற்றது. அதை விட 1932 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதற்கு முன் 106 போட்டிகளில் 70 முறை 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாக பெற்றது.

இதையும் படிங்க: அடி வாங்கிய பின்.. அந்த 2 இந்திய வீரர்களை பாத்து 7 விக்கெட்ஸ் எடுத்தேன்.. டாம் ஹார்ட்லி பேட்டி

அந்த 106 போட்டிகளில் 70 வெற்றி 36 டிராவை பதிவு செய்த இந்தியா ஒருமுறை கூட தோற்றதில்லை. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த போட்டியில் தான் 100+ ரன்கள் (190) முன்னிலை பெற்றும் இந்தியா அவமான தோல்வியை சந்தித்துள்ளது. அது போக 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் கடைசி 3 போட்டிகளில் (தோல்வி, ட்ரா, தோல்வி) இந்தியா ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.

Advertisement