90ஸ் கிட்ஸ்க்கு தான் தெரியும்.. அவர் வெறும் போஸ்டர் பாய் இல்லை.. அதை தாண்டிய மகத்தானவர் – அஸ்வின் பாராட்டு

Sachin Tendulkar
- Advertisement -

கபில் தேவ் தலைமையில் 1983 உலகக் கோப்பையை வென்றதே இந்திய மக்களை கிரிக்கெட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அந்த சரித்திர வெற்றி இன்று இந்தியாவில் கிரிக்கெட் ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் அது இந்தியாவில் மிகவும் பிரபலமாக மாறியதற்கும் அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டாக கொண்டாடப்படுவதற்கும் சச்சின் டெண்டுல்கர் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.

ஏனெனில் 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி வாசிம் அக்ரம் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்ட சச்சின் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களுக்கும் சிம்மசொப்பனமாக மாறி பெரும்பாலான போட்டிகளில் இந்தியாவை தாங்கிப்படித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
சொல்லப்போனால் 90களில் சச்சின் டெண்டுல்கர் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்ற சூழ்நிலை இருந்தது. அந்தளவுக்கு இந்திய அணியின் ஆணிவேராக இருந்த அவர் பெரும்பாலான சமயங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அபாரமாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 30000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 100 சதங்களை விளாசி 2011 உலகக்கோப்பை போன்ற நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி பலரது ரோல் மாடலாக திகழ்கிறார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் அறையில் போஸ்டர் ஃபாயாக மட்டுமல்லாமல் மொத்த இந்தியாவின் நம்பிக்கையாக இருந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி தம்முடைய ட்விட்டரில் ஹர்ஷா போக்லே உடன் நிகழ்த்திய உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே 90ஸ் கிட்ஸ் என்ற பெயரில் பெரிய குரூப் இருந்ததல்லவா? அவர்கள் சச்சின் டெண்டுல்கர் எந்தளவுக்கு ஒரு உணர்ச்சியானவர் என்பதை பற்றி பேசுவார்கள்”

- Advertisement -

“அவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் என்ன அர்த்தம். அவர் இந்திய கிரிக்கெட்டின் போஸ்டர் பாய் என்று நீங்கள் (ஹர்ஷா) சொன்னீர்கள் அல்லவா? என்னைப் பொறுத்த வரை நான் காலையில் எழுந்த ஒவ்வொரு நாளும் பார்த்த நம்பிக்கை அவர் தான். சச்சினின் ஆட்டத்தை பார்த்ததும் என்னுடைய வயிற்றுக்குள் சிறகடித்தன. அதே சமயம் அவர் அவுட்டானதும் இந்தியாவால் இருக்க முடியாது என்பதையும் நான் அறிவேன்”

இதையும் படிங்க: 5 வருஷத்துல முதல் முறையா மனைவி ஊரான இந்தியாவுக்கு வந்துருக்கேன்.. டெல்லியில் அதை செய்யணும் – பாக் வீரர் ருசிகர பேட்டி

“எனவே சச்சின் வெறும் போஸ்டர் பாய் அல்ல. அவர் வெறும் நம்பிக்கையாக மட்டும் இருக்கவில்லை. எல்லாமாக இருந்தார். கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஒரு இளம் இந்தியருக்கு அவர் எல்லாமாக இருந்தார். சச்சின் டெண்டுல்கர் ஒரு வீரர் மட்டுமல்ல அதையும் தாண்டியவர்” என்று கூறினார். இந்த நிலையில் 2023 உலக கோப்பையில் விளையாடுவதற்கு கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement