5 வருஷத்துல முதல் முறையா மனைவி ஊரான இந்தியாவுக்கு வந்துருக்கேன்.. டெல்லியில் அதை செய்யணும் – பாக் வீரர் ருசிகர பேட்டி

Hasan Ali
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார்கள். ஏனெனில் எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடைசியாக 2016 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் அணி இப்போதும் பல சர்ச்சைகள் மற்றும் விவாதங்களைக் கடந்து ஒரு வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளது.

சொல்லப்போனால் 2011க்குப்பின் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை எப்போதுமே பெறாத பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களுடைய கேரியரிலேயே முதல் முறையாக இப்போது தான் இந்திய மண்ணில் களமிறங்க உள்ளார்கள்.

- Advertisement -

முதல் முறையாக:
இந்த நிலைமையில் தம்முடைய மனைவி பிறந்த இந்திய மண்ணுக்கு முதல் முறையாக வந்துள்ளது மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் 13 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது பெற்றார்.

அந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சமியா அர்சோ எனும் இந்திய பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். ஹரியானாவைச் சேர்ந்த சமியா விமான இன்ஜினியர் படிப்பு முடித்து துபாயில் வேலை செய்த போது காதல் செய்து ஹசன் அலி திருமணம் செய்து கொண்டார். அப்போதிலிருந்தே இந்தியாவை பற்றி தம்முடைய மனைவி சொன்ன நிறைய விஷயங்களால் அங்கு செல்ல வேண்டுமென்ற ஆர்வம் நீண்ட நாட்கள் இருந்து வந்ததாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே தற்போது திருமணம் செய்து கொண்ட பின் 5 வருடங்களில் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள அவர் சமயம் கிடைக்கும் போது தம்முடைய மனைவி சொன்னது போல் டெல்லியில் இருக்கும் தெருவோர கடைகளில் ருசியான உணவுகளை சுவைக்க உள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு திருமணம் நடந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. என்னுடைய மனைவி அடிக்கடி இந்தியாவைப் பற்றி பேசுவார். குறிப்பாக டெல்லியில் இருக்கும் தெருவோர உணவுகள் பற்றி என்னிடம் சொல்வார்”

இதையும் படிங்க: உங்க மேல இருந்த மரியாதையே போச்சு.. அஸ்வினை மட்டமாக பேசிய சிவராமகிருஷ்ணன்.. ரசிகர்கள் கொந்தளிப்பு

“எனவே டெல்லிக்கு பயணித்து அங்குள்ள தெருவோர உணவுகளை நான் சுவைக்க முயற்சிக்க உள்ளேன். அதைப் பற்றி தான் என்னுடைய வீட்டில் பலமுறை நான் கடந்த 5 வருடங்களில் கேட்டுள்ளேன்” என்று கூறினார். முன்னதாக ஆசிய கோப்பையில் காயத்தை சந்தித்து நாசீம் ஷா வெளியேறியதால் அவருக்கு அதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement