உங்க மேல இருந்த மரியாதையே போச்சு.. அஸ்வினை மட்டமாக பேசிய சிவராமகிருஷ்ணன்.. ரசிகர்கள் கொந்தளிப்பு

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி நேரத்தில் தேர்வாகியுள்ளார். கடந்த 2010இல் அறிமுகமாகி 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் 2017 வரை முதன்மை ஸ்பின்னராக இருந்தார்.

இருப்பினும் அதன் பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அவர் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்ததால் சஹால், குல்தீப் ஃபார்மை இழந்த போது மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதில் 2021, 2022 டி20 உலக கோப்பைகளில் விளையாடிய அவர் 2022 ஜனவரிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால் 2023 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

மட்டமான கருத்து:
இருப்பினும் குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்துடன் 712 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த அனுபவம் கொண்ட அஸ்வின் தற்போது தேர்வாகியுள்ளார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் வர்ணனையாளர்களாக செயல்படப்போகும் முன்னாள் நட்சத்திரங்கள் பற்றி ஐசிசி வெளியிட்ட பட்டியலை மும்பையை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் மக்ராந்த வைங்கன்கர் ட்விட்டரில் பதிவிட்டார்.

அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் “இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை பற்றி வர்ணிக்க ஒரு தரமான ஸ்பின்னர் இல்லை. அப்படியானால் எப்படி இந்தியாவில் இருக்கும் மக்கள் சுழல் பந்து வீச்சை பற்றி தெரிந்து கொள்வார்கள். எனவே பேட்ஸ்மேன்களுக்கும் சில வெள்ளையான பரணையாளர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது போல் இந்த பரிதாபமான கலவை உருவாக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.

- Advertisement -

அதற்கு ஒரு ரசிகர் “ஒருவேளை சமீப காலங்களில் இந்தியா ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறுவதால் இப்படி இருக்கலாம். குறிப்பாக கிங் (கோலி). இருப்பினும் ஆரம்பகட்ட விக்கெட்டுகள் விழுந்தால் அதை பேட்டிங்கில் கணிசமாக சரி செய்யக்கூடிய அஸ்வினை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இம்முறை பிட்ச்கள் ஃபிளாட்டாகவும் சுழலுக்கு சாதகமாகவும் இருக்காது” என்று அவருக்கு பதிலளித்தார்.

இதையும் படிங்க: IND vs ENG : எங்க பவுலர்ஸ் கஷ்டப்பட கூடாது. அதனால தான் இந்த முடிவை எடுத்தேன். பெரிய மனசை காட்டிய ரோஹித் சர்மா

ஆனால் அதற்கு லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் “இந்திய மண்ணில் இருக்கும் பிட்ச்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக உருவாக்கப்படுகின்றன. அதனாலேயே இந்திய பேட்ஸ்மாங்கள் சுழலுக்கு எதிராக தடுமாறுகின்றனர். வேண்டுமானால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வினின் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். அதனால் கடுப்பான தமிழக ரசிகர்கள் சொந்த மண்ணில் விக்கெட்டுகளை அள்ளும் ஆண்டர்சன் மட்டும் ஜாம்பவான் ஆனால் அஸ்வின் சுமாரா? என்று பதிலடி கொடுப்பதுடன் உங்கள் மேல் இருந்த மரியாதை போச்சு என அவரை விளாசி வருகின்றனர்.

Advertisement