IND vs ENG : எங்க பவுலர்ஸ் கஷ்டப்பட கூடாது. அதனால தான் இந்த முடிவை எடுத்தேன். பெரிய மனசை காட்டிய ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்காக தயாராகும் வகையில் அதற்கு முன்னதாக இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி முதலாவது பயிற்சி போட்டியாக இன்று செப்டம்பர் 30-ஆம் தேதி கவுகாத்தி நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருந்தது.

ஏற்கனவே திட்டமிடப்படி இந்திய நேரப்படி மதியம் 2.pm மணிக்கு போட்டி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டதால் 1:30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் போடும் வரை வானிலை தெளிவாக இருந்தது. ஆனால் டாஸ் போட்ட பிறகு மழை பெய்ய ஆரம்பித்தது.

- Advertisement -

இந்நிலையில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஓய்வறைக்கு திரும்பிய பின்னர் பெய்ய துவங்கிய மழை நீண்ட நேரம் ஆகியும் நிற்காதால் போட்டியை இனியும் நடத்த இயலாது என்று நடுவர்களால் முடிவு செய்யப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இப்படி போட்டி கைவிடப்பட்டாலும் டாசின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த ஒரு முடிவு அவரது பெரிய மனசை காட்டும் விதமாக இருந்தது. மேலும் அவரது இந்த செயலானது பாராட்டத்தக்க வகையிலும் இருந்தது. அந்த செயல் யாதெனில் : டாசில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

மேலும் தான் ஏன் பேட்டிங்கை தேர்வு செய்தேன்? என்பது குறித்த காரணத்தையும் அவர் விளக்கினார். அதுதான் தற்போது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் டாசுக்கு பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம். இதற்கு வேறு எந்த குறிப்பான ஒரு காரணமும் இல்லை. தற்போது மைதானத்தில் வெயில் அதிகமாக இருக்கிறது. எங்களது பவுலர்களுக்கு சற்று ஏதுவாக இருக்க வேண்டும் என்பதால் தான் இந்த முடிவை எடுத்தேன்.

இதையும் படிங்க : உண்மையா சொல்லனும்னா இப்படி நடக்கும்ன்னு நான் நெனச்சி கூட பாக்கல – ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி

இரண்டாவதாக மாலை நேரத்தில் விளக்கின் ஒளியில் அவர்கள் பந்துவீசும் பொது அவர்களுக்கு எதுவாக இருக்கும் என்று கூறி தனது அணியின் பவுலர்களின் மீது அக்கறை வைத்து அந்த முடிவை ரோகித் சர்மா எடுத்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நாங்கள் அண்மையில் ஏழு-எட்டு போட்டியில் விளையாடியுள்ளோம். அதனால் நல்ல பார்மிலும் இருக்கிறோம். நிச்சயம் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் போட்டியில் நாங்கள் புத்துணர்ச்சியுடன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வோம் என ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement