உண்மையா சொல்லனும்னா இப்படி நடக்கும்ன்னு நான் நெனச்சி கூட பாக்கல – ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி

Ashwin
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கவுள்ள ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக தற்போது அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகள் கொண்ட பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி கவுஹாத்தி மைதானத்தில் இன்று செப்டம்பர் 30-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த பயிற்சி போட்டி மதியம் 2 மணிக்கு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி இரண்டு பயிற்சி போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு இருந்த வேளையில் முதலாவது போட்டி கைவிடப்பட்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த பயிற்சி போட்டிக்கு முன்னதாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் அஷ்வின் கூறியதாவது : உண்மையை கூற வேண்டும் என்றால் நான் உலகக்கோப்பை தொடருக்காக தேர்வாகி இங்கு நிற்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளாகவே நான் விளையாடும் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன்.

- Advertisement -

என்னுடைய எஞ்சிய கரியரை மகிழ்ச்சியுடன் முடிக்க வேண்டும் அதுமட்டும் தான் என் எண்ணமாக இருக்கிறது. அதோடு தற்போதெல்லாம் நான் பந்துவீச தயாராகும்போது பல வேரியேஷன்களை பயன்படுத்துகிறேன். ஏனெனில் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் பந்தை இரண்டு புறமும் திருப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பேட்ஸ்மேனை அழுத்தத்திற்குள் கொண்டு வந்து விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும்.

இதையும் படிங்க : IND vs ENG : இந்திய ரசிகர்களுக்கு முதல் போட்டியிலேயே கிடைத்த மெகா ஏமாற்றம்.. இதுக்கு தான் வெய்ட் பண்றோமா? நடந்தது என்ன

தற்போது மிகச் சரியான நேரத்தில் அணிக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சி. நிச்சயம் இதுதான் என்னுடைய கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும். எனவே இதனை நான் மகிழ்ச்சியுடன் அணுக வேண்டியது முக்கியம் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement