IND vs ENG : இந்திய ரசிகர்களுக்கு முதல் போட்டியிலேயே கிடைத்த மெகா ஏமாற்றம்.. இதுக்கு தான் வெய்ட் பண்றோமா? நடந்தது என்ன

IND vs ENG Warm Up
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் மோத உள்ளன. அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் தற்போது பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் நேற்று நியூசிலாந்து – பாகிஸ்தான், வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதிய போட்டி வெற்றிகரமாக நடைபெற்ற போதிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று மதியம் 2 மணிக்கு வலுவான நடப்பு சாம்பியன் இந்தியாவை சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா எதிர்கொண்டது.

- Advertisement -

ரசிகர்கள் ஏமாற்றம்:
குறிப்பாக உலக அரங்கில் தற்சமத்தில் தரத்தில் டாப் 2 அணிகளாக இருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஃபைனலில் மோதும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்துள்ளார்கள். அதற்கேற்றார் போல் இரு அணிகளிலும் விராட் கோலி முதல் ஜோஸ் பட்லர் வரை ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.

அந்த சூழ்நிலையில் கௌகாத்தியில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் தரமான இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்குவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வந்த மழை பெரிய அளவில் பெய்து மைதானத்தை முழுவதுமாக தண்ணீரில் நிரப்பியது.

- Advertisement -

குறிப்பாக இடைவிடாமல் தொடர்ந்து பெய்த மழை 4 மணிக்கும் மேல் ஓயாமல் வெளுத்து வாங்கியதால் நிலைமையை பார்த்த நடுவர்கள் ஒரு பந்து கூட வீசாமல் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். அதனால் ஆர்வத்துடன் காத்திருந்த இருநாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் நேற்று இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி ரத்து செய்யப்பட்டதை போலவே இந்த போட்டியும் ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க: உலககோப்பை தொடரில் நம்பர் 4 ஆம் இடத்தில் இவர் விளையாடுனா தான் சரியா இருக்கும் – சேவாக் கருத்து

அதை விட விரைவில் இந்தியாவில் மழைக்காலம் என்ற சூழ்நிலையில் இப்போதே 2 நாட்களில் 2 பயிற்சி போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முதன்மையான போட்டிகள் நடைபெறும் போது எவ்வளவு பாதிக்கப்படுமோ என்பதை நினைத்து ரசிகர்கள் இப்போதே கவலையை வெளிப்படுத்துகின்றன. அதனால் இதற்காகவா ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement