அந்த இந்திய ஜாம்பவானோட ஆலோசனை தான் நான் சதமடிக்க காரணம்.. நன்றி சொன்ன ஆப்கானிஸ்தான் சாதனை வீரர்

Ibrahim Zadran 1.jpeg
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 39வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை திறமையான ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களில் சிறப்பாக விளையாடி 291/5 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு துவக்க வீரர் ரஹ்மனுதுல்லா குர்பாஸ் 21 ரன்களில் ஆட்டமிஸ்ழந்தாலும் மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். அவருடன் மிடில் ஆர்டரில் கை கொடுத்த ரஹ்மத் ஷா 30 ரன்களும் கேப்டன் ஷாஹிததி 26 ரன்களும் ஓமர்சாய் 22 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

ஜாம்பவானின் ஆலோசனை:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய இப்ராஹிம் ஜாட்ரான் சதமடித்து 7 பவுண்டரி 3 சிக்சருடன் 129* (143) ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற வரலாற்றையும் படைத்த அவருடன் கடைசி நேரத்தில் ரசித் கான் 35* (18) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தங்களுடைய அணியை நேரில் சந்தித்துக் கொடுத்த ஆலோசனைகளே சதமடிக்க உதவியதாக கூறியுள்ளார். இது பற்றி இடைவெளியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆப்கானிஸ்தானுக்கு உலக கோப்பையில் முதல் முறையாக சதமடித்த வீரராக அசத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்”

- Advertisement -

“இந்த தொடரில் கடினமாக உழைக்கும் நான் நிறைய சதங்கள் அடிக்க விரும்புகிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக தவற விட்ட சதத்தை இப்போட்டியில் அடிக்க விரும்பினேன். குறிப்பாக அடுத்த 3 போட்டிக்குள் கண்டிப்பாக என்னால் சதமடிக்க முடியும் என்ற உணர்வு ஏற்பட்டது. இந்த மைதானத்தில் 280 – 285 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய அணி நிர்வாகத்தின் செய்தியாகும். கடைசியில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் ரசித் அபாரமாக விளையாடினார்”

இதையும் படிங்க: இந்திய அணியின் உண்மையான மேட்ச் வின்னர் அவர்தான். காரணத்துடன் விளக்கம் கொடுத்த – இம்ரான் தாஹீர்

“எங்களால் முடிந்தளவுக்கு இந்த மைதானத்தில் நிறைய ரன்கள் அடிக்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. நேற்று சச்சின் டெண்டுல்கரை நான் சந்தித்தேன். அவருடைய உள்ளீடுகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. 24 வருடங்கள் விளையாடிய அவர் தன்னுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். தன்னம்பிக்கையை கொடுத்த அவருடைய அனுபவங்கள் மற்றும் ஆலோசனைக்காக நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement