இந்திய அணியின் உண்மையான மேட்ச் வின்னர் அவர்தான். காரணத்துடன் விளக்கம் கொடுத்த – இம்ரான் தாஹீர்

Imran-Tahir
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டி நவம்பர் 5-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தங்களது எட்டாவது வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 5 விக்ட்கெடுகளை இழந்து 326 ரன்களை குவித்தது. பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 83 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதன் காரணமாக 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக நட்சத்திர வீரரான விராட் கோலி 101 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்த வேளையில் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதே வேளையில் கேப்டன் ரோகித் சர்மா 24 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 40 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை அளித்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக விராட் கோலி பேசப்பட்டாலும் இந்திய அணியில் உண்மையான மேட்ச் வின்னர் கேப்டன் ரோஹித் சர்மா தான் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடியதால் தான் இவ்வளவு பெரிய ரன் குவிப்பு இந்திய அணியிடம் இருந்து வந்ததாக நினைக்கிறேன். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அணியின் ரன் குவிப்பு வேகத்தை அதிகரித்து விடுவதால் மிடில் ஆர்டரில் வரும் வீரர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுத்து விளையாட அவகாசம் கிடைக்கிறது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கு தண்ணி காட்டிய ஆப்கானிஸ்தான் மாஸ் சாதனை.. இளம் வீரர் புதிய வரலாற்று சாதனை

எனவே ரோகித் சர்மா கொடுக்கும் சிறப்பான துவக்கம் தான் இந்திய அணி செட்டில் ஆகி பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல உதவுகிறது. என்னை பொறுத்தவரை இந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அசத்தி வருகிறார். அவரே இந்திய அணியின் உண்மையான மேட்ச் வின்னர் என இம்ரான் தாஹிர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement