ஆஸ்திரேலிய அணிக்கு தண்ணி காட்டிய ஆப்கானிஸ்தான் மாஸ் சாதனை.. இளம் வீரர் புதிய வரலாற்று சாதனை

IbrahimZadran
- Advertisement -

இந்தியாவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 39வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை செமி ஃபைனலுக்கு செல்லும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே ரஹமனுல்லா குர்பாஸ் 21 ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த ரஹ்மத் ஷா மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் தம்முடைய பங்கிற்கு கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக எளிதாக ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட்டை பரிசளிக்க கூடாது என்ற எண்ணத்துடன் சற்று நிதானமும் பொறுமையும் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 25 ஓவர்கள் வரை நின்று 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

வரலாற்று சாதனை:
அதில் ரஹ்மத் ஷா 30 ரன்களில் அவுட்டானாலும் இப்ராகிம் ஜாட்ரான் அரை சதம் கடந்து சவாலை கொடுத்தார். அவருடன் அடுத்ததாக வந்து 3வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஷாகிதி 26 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டார்க் வேகத்தில் போல்டானார். அந்த நிலைமையில் வந்த ஓமர்சாய் அதிரடியாக விளையாட முயற்சித்து 22 (18) ரன்களை அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இப்ராஹீம் ஜாட்ரான் சதமடித்தார்.

இதன் வாயிலாக உலகக்கோப்பை தொடரில் சதத்தை பதிவு செய்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்த அவர் வரலாற்றில் தன்னுடைய பெயரை பொன்னெழுத்துக்களால் எழுதினார் என்றே சொல்லலாம். அத்துடன் 21 வருடம் 330 நாட்களில் இதை அடித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன் இதே தொடரில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா 23 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த நிலைமையில் வந்த முகமது நபி 12 ரன்கள் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரசித் கான் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 35* (18) ரன்களும் இப்ராகிம் ஜாட்ரான் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 129* (143) ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 291/5 ரன்கள் எடுத்தது. இதன் வாயிலாக உலக கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து மாஸ் சாதனை படைத்துள்ளது

இதையும் படிங்: மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம். இதையாவது வாய்ப்பையாவது தக்கவைப்பாரா? – விவரம் இதோ

இதற்கு முன் 2019 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஆப்கானிஸ்தான் 288 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் தரத்திற்கு ஆப்கானிஸ்தானை ஆல் அவுட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தங்களுடைய அபாரமான திறமையால் ஆஸ்திரேலியாவை தில்லாக எதிர்த்து நிற்கும் ஆப்கானிஸ்தான் போராடினால் வெற்றி பெறக்கூடிய ஸ்கோரை எடுத்துள்ளது என்று சொல்லலாம். மறுபுறம் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement