மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம். இதையாவது வாய்ப்பையாவது தக்கவைப்பாரா? – விவரம் இதோ

Sanju-Samson
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்திய அணி எட்டு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனவே அரையிறுதிக்கான வாய்ப்பை தற்போதைய உறுதி செய்துள்ள இந்திய அணி அடுத்ததாக நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வரும் நவம்பர் 12-ஆம் தேதி விளையாட இருக்கிறது.

அந்த போட்டிக்கு அடுத்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் என இரண்டு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் வேளையில் இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக முடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அதனை தொடர்ந்து இந்திய அணி உலக கோப்பை தொடரை முடித்த கையோடு அடுத்த நான்கு நாட்களிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி நவம்பர் 23-ஆம் தேதி துவங்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த டி20 தொடருக்கான அணியில் உலக கோப்பையில் விளையாடி வரும் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இரண்டாம் தர இந்திய அணியே அந்த தொடரில் விளையாடும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு பும்ரா தலைமையிலான இந்திய அணியே அந்த தொடரில் பங்கேற்று விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய இளம் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த சையது முஸ்டாக் அலி தொடரில் கேரள அணிக்காக கேப்டன் பதவி ஏற்று விளையாடிய சாம்சன் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டுடன் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்க இந்திய அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : இப்போ கூட சொல்றேன்.. எனக்கு அந்த ஃபீலிங் இருக்கு.. இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த மிக்கி ஆர்தர்

இதுவரை இந்திய அணிக்காக 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நிரந்தரமாக தக்க வைக்க முடியாமல் தவித்து வரும் வேளையில் இம்முறையாது கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement