இப்போ கூட சொல்றேன்.. எனக்கு அந்த ஃபீலிங் இருக்கு.. இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த மிக்கி ஆர்தர்

Mickey Arthur 3
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வீட்டுக்கு கிளம்புவோமா அல்லது செமி ஃபைனல் செல்வோமா என்ற நிலைமையில் இருக்கிறது. ஏனெனில் நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளுடன் நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 191 ரன்களுக்கு சுருண்டு 8வது முறையாக தோற்றது.

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிராக வென்ற பாகிஸ்தான் பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிராக மழையின் உதவியுடன் பஃகார் ஜமான் அதிரடியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

ஃபீலிங் இருக்கு:
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் வெல்வதுடன் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து தோற்றால் பாகிஸ்தான் செமி ஃபைனல் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் தங்களுடைய கடைசி 1 போட்டிகளில் குறைந்தது ஒரு தோல்வியை பதிவு செய்வதும் பாகிஸ்தானின் செமி ஃபைனல் வாய்ப்புக்கு அவசியமாகிறது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கை கொடுத்த அதிர்ஷ்டம் அடுத்து வரும் போட்டிகளிலும் தங்களுக்கு உதவி செய்யும் என்ற உள்ளுணர்வு தமக்கு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார். அதனால் கண்டிப்பாக செமி ஃபைனல் சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறுவோம் என்றும் அவர் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

ஒருவேளை அவர் சொல்வது போல் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு வந்தால் புள்ளி பட்டியல் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை தான் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் அரையிறுதியில் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை வரும். அந்த வகையில் ஏற்கனவே இந்தியாவை ஃபைனலில் தோற்கடிப்போம் என்று தெரிவித்திருந்த அவர் தற்போது செமி ஃபைனலில் அதை செய்வோம் என்று மறைமுகமாக எச்சரித்து பேசியுள்ளது பின்வருமாறு.

“இந்த தொடரில் நாங்கள் எப்படி செல்வோம் என்பதை யார் அறிவார். இப்போதும் நாங்கள் செமி ஃபைனலுக்கு செல்வோம் என்ற உணர்வு எனக்குள் இருக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அது சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் எங்களுடைய கையில் இருக்கிறது. அதில் அதிர்ஷ்டத்தின் உதவி கொஞ்சம் இருந்தால் நாங்கள் கண்டிப்பாக செமி ஃபைனல் செல்வோம். அப்போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளைப் போல் அதிலும் நாங்கள் அசத்துவோம்” என்று கூறினார்.

Advertisement